1.பேகன் – மயிலுக்குப் போர்வை அளித்தவன் (ஆட்சி செய்த இடம் – பொதினி -தற்போதய பழனி)
2.பாரி – முல்லைக்குத் தேர் தந்தவன் (ஆட்சி செய்த இடம் – பறம்பு மலை)
3.காரி – (திருக்கோவிலூர்) ஈர நன்மொழி கூறியவன். தனது வரிப்பணத்தில்அதியமானுக்கு செலுத்த வேண்டிய நெல்லை ஏழைகளுக்கு வாரி வழங்கி சிறை சென்றவன்.
4.ஆய் – நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன் (பொதிகை மலை)
5.அதியமான் – நெல்லிக்கனியை ஔவைக்கு அளித்தவன் (தர்மபுரி)
6.நள்ளி – துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்
7.ஓரி -(கொல்லிமலை) தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன்.
இவர்களில் காரி என்பவர் காரியாசான் என அழைக்கப்பட்ட வள்ளல் அதியமானின் ஆட்சிக்குட்பட்ட குறுநில மன்னர்.
வள்ளல் காரியாசானை கைது செய்த அதியமான். விடுவிக்க வைத்த ஔவையார்…
[…] கடையெழு வள்ளல்கள் […]