`மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்– என்னை விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு’ – கம்பர்
ஒரு சமயம் குலோத்துங்க சோழனும் கம்பனும் நந்தவனத்தில் உலவி வலம் வந்தபோது, அரசன் செருக்குடன் கூறினான், “கம்பரே இந்த நாடே எனக்கடிமை” என்று. கம்பரோ வாய்துடுக்காக “அரசே, ஆனால் நீங்களோ என்னடிமைதானே” என்று முன்னொருமுறை உபசாரமாக மன்னன் கூறியதை நினைவுபடுத்த மன்னனுக்கு…