1. சகரன்
2. காரி
3. நளன்
4. துந்துமாரி
5. நிருதி
6. செம்பியன்
7. விராடன்
கடை எழு வள்ளல்கள் பற்றிய விவரமே முழுதும் கிடைக்கிறது. மேற்கண்டோரில் நளன் பற்றி மட்டுமே நாம் அறிவோம். அதுவும் நாம் அறிந்த இதிஹாச, புராண புருஷர்தானா அல்லது அதே பேரில் உள்ள வேறு வள்ளலா என்பதை அறியோம்.
மேலும், செம்பியன் என்பவர் சோழர் குலத்தின் முன்னோனாக கருதப்படுகிறார். இந்திர விழாவை இவரே ஆரம்பித்தார். புறாவிற்காக சதையை அறுத்துக்கொடுத்த சிபி சக்ரவர்த்தி இவரே என்று நம்பப்படுகிறது .
கடை ஏழு வள்ளல்கள் எழுவரும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததை நாம் அறிவோம்; ஆதலால் மற்ற முதல் ஏழு மற்றும் இடை ஏழு வள்ளல்கள் ஆகிய 14 பேரும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தோரே!