Spread the love

அண்ணாத்த படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினியின் அடுத்த படமான “தலைவர் 169″ படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி பல நாட்களாக நிலவி வருகிறது. இதற்கு நெல்சன் திலீப்குமார், தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட பல டைரக்டர்களின் பெயர்கள் அடிபட்டது. ஆனால் ” தலைவர் 169″ படத்தை இயக்க போவது இவர்கள் யாரும் இல்லை.

இசைஞானி இளையராஜா தனது பாவலர் கிரியேஷன்ஸ் மூலம் ரஜினியின் ராஜாதி ராஜா, கமலின் சிங்கார வேலன் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தயாரிப்பிற்கு திரும்ப இளையராஜா முடிவு செய்திருப்பதாகவும், அதுவும் டாப் ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய் படங்களை தயாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் ஏற்கனவே நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை இளையராஜா தயாரிக்க போவது கிட்டதட்ட முடிவாகி விட்டதாம்

இந்த படத்தை இயக்க போவது பிரபல பாலிவுட் டைரக்டர் பால்கி.

இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்கவும் போகிறாராம். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யப் போகிறவர் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி. ஸ்ரீராம். தலைவர் 169 படத்தின் கதை முதலில் அமிதாப் பச்சனுக்காக தான் எழுதப்பட்டதாம். ஆனால் திரைக்கதை முடிவடையும் சமயத்தில் இதில் ரஜினிகாந்த் நடித்தால் எப்படி இருக்கும் என யோசித்து தான் ரஜினியிடம் பேசினார்களாம். கதையை கேட்டதும், அதுவும் இளையராஜா தயாரிக்கும் படம் என்பதால் உடனே ரஜினி ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *