சூப்பர்ஸ்டார ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது. இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்த படத்தில் அமிதாப் பச்சன் , ஃபஹத் பாசில் ராணா டக்குபதி மற்றும் மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். ” ராக்ஸ்டார் அனிருத் ” இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
ரஜினியின் “2.O” மற்றும் “தர்பார்” படங்களில் பணிபுரிந்து லால் சலாம் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட லைகா தயாரிப்பு நிறுவனம் இப்போது நான்காவது முறையாக மீண்டும் இணைந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு வெளியான கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தின் மூலம் பிரமாண்டமாக நுழைந்து, சூர்யாவின் பிளாக்பஸ்டர் ‘ஜெய் பீம்’ மூலம் திருப்புமுனையை அடைந்தவர் இயக்குநர் டி .ஜே.ஞானவேல். லைகாவைப் பொறுத்தவரை, நான்காவது முறையாக ரஜினிகாந்தின் படத்தைத் தயாரிக்கிறது. ஏற்கனவே 2.0, லால் சலாம் மற்றும் தர்பார் போன்ற ஹிட் படங்களைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் வேட்டையன் படம், முன்பு “தலைவர் 170,” என்று பெயரிடப்பட்டிருந்தது. “ஞானவேல்” இயக்கும் இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாக கூறப்படுகிறது, இது ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.
வேட்டையன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாகுபலி நடிகர் ராணா டகுபதி நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமிதாப் பச்சன் இந்த படத்தில் வில்லனுக்கு ஆதரவான கேரக்டரில் நடிப்பதாக யூகிக்கப்படுகிறது. இந்தப் படத்திற்காக திருநெல்வேலி, சென்னை, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் வேட்டையன் திரைப்படம் 10 அக்டோபர் 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.