வருகின்ற பிப்ரவரி 6-ம் தேதி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி புதிய சரித்தரத்தை படைக்கப்போகிறது.
இந்திய அணி விளையாடும் 1000வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் ‘மோதிரா’மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் 1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் நாடு என்ற பெருமையை இந்திய அணி பெறவுள்ளது.
இதுவரை இந்திய அணி 999 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 518 வெற்றிகளையும் 431 தோல்விகளையும் பெற்றுள்ளது . 9 போட்டிகள் டையில் முடிந்த நிலையில் 41 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.
இந்தியா ஒவ்வொரு சதாப்தத்தை எட்டியபோது யார் கேப்டனாக இருந்தார்கள் தெரியுமா?
100வது போட்டி : கபில் தேவ்
200வது போட்டி : முகமது அசாருதீன்
300வது போட்டி : சச்சின் டெண்டுல்கர்
400 ஆவது போட்டி : முகமது அசாருதீன்
500வது போட்டி : சவுரவ் கங்குலி
600வது போட்டி : விரேந்தர் சேவாக்
700வது போட்டி : எம்எஸ் தோனி
800வது போட்டி : எம்எஸ் தோனி
900வது போட்டி : எம்எஸ் தோனி
1000வது போட்டி : ரோஹித் சர்மா