பெண் சாபம் என்பது பெண்களை திருமண ஆசைகாட்டி புணர்ந்தபின் திருமணம் செய்யாமல் ஏமாற்றுவது, தாயைப் பழிப்பது, வயதான தாயைக் கைவிடுவது, சகோதரிகளை ஆதரிக்காமல் கைவிடுவது, மனைவியைக் காரணமில்லாமல் கைவிட்டு பிரிந்து செல்வதாலும் உண்டாகக் கூடியது ஆகும். இவ்வாறு கைவிடப்பட்ட பெண்கள் சபிப்பதால் ஏற்படுவது பெண் சாபம் ஆகும்.
சாபத்தில் கொடிய சாபமாக பெண் சாபம் கருதப்படுகிறது. இதனால் சாபம் பெற்றவர் தன் மனைவியுடன் நிம்மதியான கலவி செய்ய இயலாது. அவரது நெருங்கிய உறவுகள் எதிரியாவர் அல்லது மரணிப்பர். மேலும் அவரின் வம்சமே அழியும் நிலை உண்டாகும். பெண்களால் ஏற்பட கூடிய இந்த சாபத்திற்கு பைரவரை வழிபடலாம்.
மேற்கூறிய காரணங்கள் இல்லாமல் குடும்ப சண்டையில் தாய்,சகோதரி மற்றும் மனைவி சபிப்பது பெண் சாபம் ஆகாது.
[…] 13.பெண் சாபம் […]