Spread the love

விஜய் டிவியில் பள்ளி கால நினைவுகளை பொக்கிஷமாக பதிவு செய்த தொடர் கனா காணும் காலங்கள். பள்ளி முதல் கல்லூரி வரை பல சீசன்களாக வெளியாக சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் கனா காணும் காலங்கள் தொடர் புத்தம் புது பொலிவுடன் மீண்டும் தயாரிக்கப்படு வருவதாக செய்திகள் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இம்முறை இந்த தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த புரோமோ 3 நாட்களில் 2.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அந்த புரோமோவின் இறுதியில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் மட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய கனா காணும் காலங்கள் தொடரை பார்க்க விரும்பும் நேயர்கள் விஜய் டிவியில் பார்க்க முடியாது, ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் தான் பார்க்க முடியும். இதோ அந்த ப்ரமோ….

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *