Spread the love

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கான்வாய் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது குறித்து சாய்னா நேவால் ட்வீட் மூலம் கவலை தெரிவித்தார். அதற்கு நடிகர் சித்தார்த் பதிலளித்துள்ளார். அந்த ட்வீட் பாலியல் உள்ளர்த்தத்துடன் உள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.

கடந்த வாரம் பஞ்சாபின் பதிண்டாவில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் கான்வாய் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது குறித்து திருமதி நேவால் கவலை தெரிவித்திருந்தார்.

எந்த நாடும் தனது சொந்த பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் மிகவும் வலுவான வார்த்தைகளில் கண்டிக்கிறேன்” என்று ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற திருமதி நெஹ்வால் ட்வீட் செய்துள்ளார்.

இதை ரீட்வீட் செய்த சித்தார்த், “Subtle cock champion of the world… Thank God we have protectors of India. 🙏. Shame on you #Rihanna.” என குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் மூன்று புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு சர்வதேச பாப் நட்சத்திரம் ரிஹானா என்பவர் ஆதரவு அளித்ததை குறைசொல்லும் விதத்தில் #Rihaana டேன்ஜென்ட் பயன்படுத்தப் படுகிறது.

சாய்னா நெஹ்வால் பேட்மின்டன் விளையாட்டு வீராங்கனை ஆவார். பேட்மின்டன் விளையாட்டில் Shuttle Cock எனப்படும் இறகு பந்து பயன் படுத்தப்படும். Shuttle Cock என்பதை சாய்னாவை கேலி செய்யும் விதமாக Subtle cock champion of the world..எனக் குறிப்பிட்டார் சித்தார்த். இதில் Subtle cock என்பதற்கு நுண்ணறிவு பந்து என பொருள். மேலும் Subtle cock என்பதை “நுண்ணறிவு ஆணுறுப்பு” எனவும் பொருள் கொள்ளலாம்.

சித்தார்த்தின் இந்த ட்வீட்டை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா விமர்சித்துள்ளார். “இந்த நபருக்கு ஒன்று அல்லது இரண்டு பாடங்கள் தேவை. @TwitterIndia, இவரின் கணக்கு ஏன் இன்னும் உள்ளது? சம்பந்தப்பட்ட பொலிசாரிடம் எடுத்துச் சொல்லுங்கள்” என்று திருமதி ரேகா கூறினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு நடிகர் பதிலளித்தார், அவர் யாரையும் அவமரியாதை செய்ய விரும்பவில்லை என்றும் அவரது “Subtle cock” ட்வீட்டில் எந்தவிதமான உள்ளர்த்தமும் இல்லை எனக் குறிப்பிட்டார். தனது ட்வீட்-ஐ நியாயப் படுத்தும் விதத்தில் “Cock and Bull” கதையை மேற்கோள் காட்டி Cock and Bull என குறிப்பிடப்படும் பட்சத்தில் Cock என்பதற்கு ஆணுறுப்பு என பொருள் கொள்ள இயலாது. அதுபோல தனது ட்வீட்- ஐயும் தவறாக பொருள் கொள்ளக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *