ஒரு ஆண்மகன், தன் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பெற்ற தாய் தந்தையை மூன்றாம் நபர் போல நடத்துவதும், தன் மனைவி மக்களுக்கு நிகராக பெற்றோரைப் பேணாமல் பாரபட்சம் காட்டுவதும் பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபம் ஆண்வாரிசு இல்லாத வீட்டில் திருமணம் செய்து பின் தன் மாமனார் மாமியாரை கைவிட்டவனுக்கும் சேரும்.
பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும். வீட்டில் உள்ள வயது மூத்தவர்களை உதாசீனப்படுத்தாமல் அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.
சாபம் என்பது உண்மையில் பலிக்குமா? சாஸ்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ள 13 வகையான சாபங்கள்.
[…] 9.பித்ரு சாபம் […]