NEET மற்றும் JEE போன்ற போட்டித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி விட்டன. வழக்கம்போல தனியார் இடெக்னோ பள்ளிகள், பல இலட்சங்கள் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் கோச்சிங் சென்டர்களின் விளம்பரத்தை அனைத்துப் பத்திரிகைகளிலும் பார்க்கலாம்.
இந்த NEET மற்றும் JEE தேர்வுகளில் வெற்றிபெறுவது கோச்சிங் சென்டர் போகாத சாமானிய மாணவனுக்கு சாத்தியமா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே பதில். இந்த NEET மற்றும் JEE தேர்வுகள் மருத்துவம் மற்றும் IITல் பயிலும் சாமானியனின் கனவை கானல்நீர் ஆக்கி விட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ஏழை மாணவர்கள் எந்தவித கோச்சிங்-ம் இல்லாமல் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 98 விழுக்காடுக்கும் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடிகிறது. ஆனால் இவ்வாறு மிக அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களால்கூட NEET மற்றும் JEE தேர்வுகளில் கோச்சிங் இல்லாமல் வெற்றிபெற முடிவதில்லை. இதற்கான காரணங்கள் இதோ:’
- NEET மற்றும் JEE தேர்வுகளுக்கான பாடத்திட்டம் அதாவது SYLLABUS கோச்சிங் போகாத மாணவர்கள் அறிந்திருப்பதில்லை.
- 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களிலிருந்து 25% கேள்விகள் மட்டுமே NEET/ JEE தேர்வுகளில் கேட்கப் படுகின்றன. இதர 75% கேள்விகள் இளநிலை பட்டப்படிப்பு பாடங்களிலிருந்து கேட்கப் படுகின்றன.
- நமது பள்ளிகள் பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை மிகச்சிறப்பாக பயிற்றுவிக்கின்றன. ஆகவே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோச்சிங் இல்லாமலேயே 100% மதிப்பெண் ஒரு சாமானிய மாணவனால் பெற இயலும். அவ்வாறு பெறும் கோச்சிங் போகாத ஒரு மாணவனால் NEET/JEE தேர்வில் 25% மதிப்பெண்கள் மட்டுமே பெற இயலும்.
JEE/ NEET தேர்வு சாமானியனுக்கு எட்டுவதற்கு அரசு என்ன செய்ய வேண்டும்?
- 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தை JEE/ NEET தேர்விற்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம்.
- அரசு பள்ளிகளில் NEET/ JEE தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கலாம். பயிற்றுவிப்பதற்காக தகுதியான ஆசிரியர்களை நியமிக்கலாம்.
- இறுதியாக, JEE/NEET தேர்விற்கான கேள்விகள் 11 &12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களிலிருந்து மட்டுமே கேட்கப்பட வேண்டும் என்ற அரசாணை மத்திய அரசால் வெளியிடப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இதுபற்றிய உங்களது மேலான கருத்துக்களை கமெண்ட்-இல் பதிவிடவும்.