பிரபல தமிழ் யூடியூபர் மதன்கவுரி தன்னுடைய திருமணம் குறித்த தகவலை தன்னுடைய யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், தன்னுடைய 11 ஆண்டு கால காதல் பற்றியும், சில சுவாரஸ்யமான தகவல்களை அவர் கூறியுள்ளார். தனது காதல் பற்றி அவர் கூறியதாவது:-
பள்ளிப் படிப்பு முடிந்து, சோசியல் மீடியா மூலம் தான், நித்யாவிடம் பேச ஆரம்பித்தேன். ஆரம்பத்தில், நட்பாக தான் பேச ஆரம்பித்தோம். அதன் பிறகு தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. மதுரை ரெயில் நிலையம் ஒன்றில் வைத்து தான், நேராக முதல் முறையாக நித்யாவை நேரில் சந்தித்து பேசினேன். நாங்கள், வெவ்வேறு கல்லூரிகளில் தான் படித்தோம்.
கல்லூரிப் படிப்பிற்கு பின்பு அவங்க வேலைக்கு போயிட்டாங்க, நான் மாஸ்டர்ஸ் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் சண்டை உருவானது. அதற்கு முழுக்க முழுக்க காரணம் நான் மட்டும் தான். அந்த சண்டை, எங்களை பிரேக் அப் வரைக்கும் கொண்டு சென்றது. ஐந்து வருடங்களாக நீடித்த காதல், பிரிவாக மாறியது கடும் மன உளைச்சலைக் கொடுத்தது.
அதன் பிறகு தான், அதில் இருந்து வெளியேற வேண்டி, யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தேன். அதன் மூலமாவது, நித்யா என்னை பார்த்து பேசுவார் என்பதற்காக தான் ஆரம்பித்தேன். என்னுடைய வீடியோவும் மெல்ல மெல்ல ரீச் ஆக ஆரம்பித்தது. அதன் பிறகு தான், முழு நேரமாக யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு வந்தேன். தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு, அவரிடம் மீண்டும் பேச வாய்ப்பு கிடைத்தது.
நித்யாவை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டேன். அவரும் சம்மதித்து விட்டார். நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதி என்ற போதிலும், எங்களது குடும்பத்தினர், எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எங்களின் பெற்றோர்களைப் போல, அனைவரும் சாதி, மத பேதத்தை மறந்து, காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என மதன் கௌரி தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், தங்களின் காதல் தருணத்தில் நிகழ்ந்த சில பொன்னான தருணங்கள் குறித்தும், மதன் கௌரி, சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவரது முழு வீடியோவும் பார்த்து மகிழுங்கள். வீடியோ இதோ….
அவரது Twitter பக்கத்தில் என்ன குறிப்பிட்டுள்ளார் பாருங்கள்
From being friends on social media to falling in love and then breaking up only to patch up again. It's been 11 years since it all started! We will be getting married this year. ❤️ pic.twitter.com/OjPEoVZOaK
— Madan Gowri (@madan3) January 11, 2022