தமிழ் நடிகர் சிம்பு, நடிகை நிதி அகர்வாலை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக வதந்தி பரவி வருகிறது. இருவரும் சிறிது காலமாக லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், நிதிக்கு நெருக்கமான ஒருவர் இந்த தகவலை மறுத்துள்ளார்.
“இது எப்படி தொடங்கியது என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை. ஈஸ்வரன் படப்பிடிப்பில் இருந்து அவர்கள் ஒருவரையொருவர் அறிவார்கள். அவ்வளவுதான்” என்று பிங்க்வில்லா என்ற இணையதளத்திற்கு நிதிக்கு நெருக்கமானவர் கூறி உள்ளார்.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிதி. அவரது அடுத்த படம் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன். இந்த இரண்டு படங்களும் கடந்த ஆண்டு பொங்கல் அன்று வெளியானது.
ஈஸ்வரன் படத்தில் சிம்புவும் நிதியும் இணைந்து நடித்ததில் இருந்தே, இவர்களது இணைப்பு குறித்த வதந்திகள் மறைய மறுத்து வருகின்றன. இது குறித்து சிம்புவோ, நிதியோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும், கிசுகிசுக்கள் வலுத்து வருகின்றன.