சமீபத்தில் விவாகரத்தான நடிகை சமந்தா தனது விவாகரத்துக்கு பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ ‘யசோதா’ படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தில் சமந்தா ஆடிய ஒ அண்ட்டா வா மாவா பாடல் வைரலானது. இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் ஹிட் ஆனது.
இந்நிலையில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளார் சமந்தா. அதில் தனது ரசிகர்களுக்கு சவால் விடுத்துள்ளார். அந்த சவால் என்னதென்றால் எந்த ஒரு உடற்பயிற்சி உபகரண கருவிகள் இல்லாமல் உடற்பயிற்சி செய்து கலோரிகளை எரிக்க வேண்டும். இதை சமந்தாவின் ஜிம் பயிற்சியாளர் சமந்தாவுக்கு சவாலாக விடுத்தாராம், இந்த சவாலை ஏற்றுக்கொண்ட சமந்தா இதையே ரசிகர்களுக்கும் சவாலாக விடுத்துள்ளார். அவரே வெளியிட்ட வீடியோ இதோ….