Spread the love

கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக முன்பு விழுப்புரம் மாவட்டம் இருந்தது. பின்னர் கடலூரில் இருந்து பிளவுபட்டது மற்றும் செப்டம்பர் 30, 1993 அன்று ஒரு தனி மாவட்டமாக மாறியது. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தின் வரலாறு கடலூர் மாவட்டத்தை ஒத்திருக்கிறது.

சோழர்கள் ஆரம்பகால ஆட்சியாளர்களாக இருந்தனர். இந்த ஆட்சியாளர்களிடையே கரிகால சோழர் மிகவும் புகழ்பெற்றவர். சிறிது காலம்,சிம்ம விஷ்ணு எனும் பல்லவ அரசரால் சோழர்கள் வெளியேற்றப்பட்டு, பல்லவ ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்தது. விஜயாலய  சோழர் மீண்டும் சோழ ஆட்சிக்கு புத்துயிர் ஊட்டினா். இது பெரிய சோழ சாம்ராஜ்யத்தின் ஆரம்பமாகும். பின்னர் சோழர் ஆட்சியாளர்கள் பலவீனமாக இருந்ததினால்,   ஆட்சி அதிகாரத்தை கிழக்கு சாளுக்கியர்கள் கைப்பற்றினார்கள்.

அதன் பின்னர் வந்த சோழர்கள் மீட்டு ஆண்ட போதும் முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1251ஆம் ஆண்டு தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். இதனால் சோழப்பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. சுமார் 50ஆண்டுகள் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்த இப்பகுதி முகலாயர்களின் படையெடுப்பால் கி.பி.1334-1378 ஆண்டுகள் வரையிலும் முகலாயர்களின் வசம் இருந்தது. முகாலாயர்களிடமிருந்து விஜய நகரப்பேரரசும், நாயக்க மன்னர்களும் ஆண்டனர்.

கி.பி.1677ஆம் ஆண்டு கோல்கொண்டா படையினரால் சிவாஜி மன்னர் செஞ்சிக் கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் முகலாயப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. முகாலாய ஆட்சியின் போதே ஆங்கில, பிரெஞ்சுப் படைகளிடம் ஒப்பந்தப்படுத்தப்பட்டு தென்னாற்க்காடு மாவட்டமாக மதராசு மாகாணத்தின் கீழ் வந்தது. கர்நாடகப் போரின் போது போர்க்களமாக இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியால் ஆக்கிரமிக்கப்பட்டு 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடையும் வரையிலும் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தது.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *