நீங்கள் வெளியே கிளம்பும்போது, திடீரென்று வாலை ஆட்டிக்கொண்டு, நாய் ஒன்று, உங்கள் முன்னே வந்து நின்றாலோ, அல்லது அந்த நாய் உங்கள் பின்னாடியே ஓடி வந்தாலும், அது ஒரு நல்ல சகுனமாக சொல்லப்பட்டுள்ளது. பைரவரின் வாகனமாக சொல்லப்படும் இந்த நாய், நீங்கள் நல்ல காரியத்திற்கு செல்லும் போது உங்கள் எதிரே வந்து வாலை ஆட்டிக்கொண்டு நின்றால், அதற்கு சாப்பிட ஏதாவது பிஸ்கட்டை கொடுக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். அது மிகவும் நல்லது. அதாவது அதற்கு உணவு வைத்துவிட்டு, அதன் பின்பு நீங்கள், உங்கள் நல்ல காரியத்தை பார்க்க செல்லலாம்.