சிலருக்கு வலது கண் துடிக்கும். ஒரு சிலருக்கு இடது கண் துடிக்கும். இப்படி கண்கள் துடிப்பது எந்த விதத்தில் நமக்கு பாதிப்பை தரும்?
அதிலும் ஆண்களுக்கு வலது கண் துடிப்பது நல்லது என்றும், அதுவே பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது என்றும் ஒரு கூற்று உள்ளது.
பெண்களுக்கு வலது கண் துடித்தால் கெட்டது என்றும், இடது கண் துடித்தால் நல்லது என்றும் நம் மக்களிடையே பல கருத்துக்கள் பரவி வருகின்றது.
கண்கள் துடிப்பது நல்லது என்று கூற முடியாது. ஏனெனில் கண்கள் துடிப்பதற்கு உடலின் ஆரோக்கியமின்மை குறைபாடுகளின் அறிகுறியாகக் கூட அமையலாம் .
நமது உடலில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில சமயங்களில் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும்.
எல்லாருக்குமே திடீரென கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது என்றும் இடது கண் துடித்தால் நல்லது என்றும் நாமாகவே கண்களை கூட விட்டு வைக்காமல் ஜோதிடம் பார்த்துவிடுகிறோம்.
கண்கள் துடிப்பது நல்லது என்று கூற முடியாது. வேண்டுமானால் கெட்டது என்றே கூறலாம். காரணம் என்னவென்றால் நமது கண்கள் துடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
சாதாரண தூக்கமின்மையில் தொடங்கி, மூளை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகள் வரை கண்கள் துடிப்பதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளன.
கண்கள் துடிப்பது எதனால் ஏற்படுகிறது என்று பார்ப்போம்….
நமது உடலில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில சமயங்களில் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும்.
ஜோதிடர்கள் கூற்றுப்படி ஆண்களுக்கு கண்கள் துடிப்பதன் பலன்கள் என்ன என்று பார்ப்போம்…
வலது புருவம் துடித்தால் :- பணவரவு.
இடது புருவம் துடித்தால் :- குழந்தை பிறப்பு, கவலை.
புருவ மத்தி துடித்தால் :- பிரியமானவருடன் இருத்தல்.
கண் நடுபாகம் துடித்தால் :- மனைவியை பிரிந்திருத்தல்.
வலது கண் துடித்தால் :- நினைத்தது நடக்கும்.
இடது கண் துடித்தால் :- மனைவியை பிரிந்திருத்தல், கவலை.
வலதுகண் இமை துடித்தால் :- சந்தோஷமான செய்தி வரும்.
இடது கண் இமை துடித்தால் :- கவலை.
இதெல்லாம் பலன்களாக கூறப்பட்டு வருகிறது
பெண்களுக்கு வலது கண் துடித்தால் தீமை.
ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நன்மை.
Im very pleased to find this site. I need to to thank you for ones time for this particularly fantastic read!! I definitely really liked every part of it and I have you bookmarked to see new information on your site.