Spread the love

என்ன சொல்ல போகிறாய்

டைரக்டர் ஹரிஹரின் எழுதி, இயக்கி உள்ள படம் “என்ன சொல்ல போகிறாய்”. இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் குமார் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். காதல் மற்றும் காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அவந்திகா மிஸ்ரா, புகழ், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நாய் சேகர்

காமெடியன் சதீஷ் ஹீரோவாக அறிமுகமாகி ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள படம் நாய் சேகர். குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரலட்சுமி, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், மனோபாலா உள்ளிட்டோர் நடித்து வெளியாகும் காமெடி, என்டர்டெயின்மெட் படம். கிஷோர் ராஜ்குமார் இயக்கி உள்ள, நாயை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் இது. அனிருத் இசையமைத்துள்ளார்.

கொம்புவச்ச சிங்கம்டா

குமாரின் ராதேன் சினிமாஸ் தயாரித்து, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் ஹீரோவாக நடித்துள்ள படம் “கொம்புவச்ச சிங்கம்டா”. மடோனா செபாஸ்டியன், சூரி, யோகிபாபு, தீபா ராமானுஜம் நடித்துள்ள கிராமத்து குடும்ப கதையாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம்.

கார்பன்

விதார்த் ஹீரோவாக நடித்து இந்த பொங்கலுக்கு வெளியாகும் த்ரில்லர் படம் “கார்பன்”. அண்ணாதுரை படத்தை இயக்கிய டைரக்டர் ஆர்.ஸ்ரீநிவாசன் இயக்கி உள்ள இந்த படத்தில் தன்யா பாலகிருஷ்ணன், விக்ரம் ஜெகதீஸ், மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *