நமது வீடுகளில் நாம் பல பூரான்கள் பார்த்திருப்போம். இவை பெரும்பாலும் நமது வீட்டின் கழிப்பறை மற்றும் அழுக்கு தண்ணீர் வெளியேறும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். பூரானின் உடல் அமைப்பு அதிக வெப்பத்தை தாங்கும் வகையில் இல்லை. ஆகவே பூரான்கள் குளிர் மற்றும் ஈரமான பகுதிகளையே விரும்பி வாழ்கின்றன.
இந்த பூரான்கள் சிறு புழு , பூச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை உண்டு உயிர் வாழ்கின்றன.இந்த பூரான்கள் தரையில் படுத்திருக்கும் மனிதர்கள் மீது ஏறுவதைக் நீங்கள் கவனித்தது உண்டா? அதிலும் குறிப்பாக இந்த பூரான்கள் தரையில் படுத்திருப்போரின் உள்ளாடையின் உள்ளே செல்ல முயற்சிப்பதைக் கேள்விப்பட்டது உண்டா? இதற்கானக் காரணத்தைத் தெரிந்துகொள்வோம்.
பொதுவாக பூரான்கள் மிகக் குறைந்த பார்வைத் திறன் கொண்டவை. பூரான்களுக்கு சாக்கடை மற்றும் சிறுநீர் போன்றவற்றை முகரும் திறன் அதிகம். இவை பொதுவாக யூரின்வாடைமிக்க இடங்கள் மற்றும் சாக்கடை அருகில் வரும் புழு பூச்சிகளை வேட்டையாடி உட்கொள்ளும். தமக்கான உணவை தனது முகரும் திறன் மற்றும் தனது தொடு உணர்வு கொண்டு வேட்டையாடி உண்ணும். நமது உள்ளாடையில் பொதுவாக சிறுரநீர்வாசனை வருதல் இயல்பு. இந்த சிறுநீர்வாசனையால் ஈர்க்கப்பட்டு பூரான்கள் நமது உள்ளாடையை நோக்கி வருகின்றன்.
இதைத் தவிர்க்க விரும்பினால் சிறுநீர் கழித்தபின் சிறுநீர் உள்ளாடையில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.