ஒரு வீட்டிற்கு முக்கியமான வாஸ்து எது தெரியுமா?
ஒரு வீட்டில் வசிப்பவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால் அவர்களுடைய உடல் நலன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
ஒருவருக்கு எல்லா செல்வங்களும் சிறப்பாக இருந்தாலும் உடல்நிலையும் மனநிலையும் சரியாக இல்லையென்றால் அவரால் நிம்மதியாக இருக்க முடியாது.எந்த முடிவுகளையும் சரியாக எடுக்க இயலாது.
அப்படிப்பட்ட உடல்நிலையும் மனநிலையும் நலமாக இருக்க வேண்டுமென்றால் அவர் இருக்கும் இடத்திலே நல்ல காற்று மற்றும் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும்.அதனால் ஒரு வீட்டிற்கு முக்கியமான வாஸ்து அந்த வீட்டிற்குள்ளே நல்ல காற்று நல்ல வெளிச்சம் வர வேண்டும்.
கீழே உள்ள படத்தை பார்க்கவும்
காலை கதிரவன் கிழக்கில் உதிக்கும்போது அதில் ஜீவ சக்திகள் அதிகம் நிரம்பி இருக்கிறது.எனவே அந்த ஜீவ சக்தி நமது வீட்டிலும் கிடைக்க வடக்கிலும் கிழக்கிலும் அதிக கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அமைத்து கொள்ளலாம்.மேலும் நல்ல காற்றோட்டம் வீட்டில் இருக்க நாம் படத்தில் காட்டிய இடத்திலும் மற்றும் அதற்கு எதிர் எதிர் திசையிலும் (cross ventilation) ஜன்னல் மற்றும் கதவுகளை அமைத்துக் கொள்ளுங்கள்.இதன் மூலம் நல்ல ஆரோக்கியமான நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.
இந்தப் பதிவை பொறுமையுடன் படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
நலமுடனும் வளமுடனும் வாழ்க 🙏