பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்
என்று சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது.
சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை எப்படி ஆனது?
சேந்தனார் வீட்டுக்கு களி உண்ண சிபெருமான் வந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் திருவாதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.
மார்கழி மாதத்தில் இந்த திருவாதிரை நட்சத்திரம் வரக்கூடிய நாளன்று அதிகாலையில், சிவன் கோவிலுக்கு சென்று நடராஜரை தரிசனம் செய்ய வேண்டும். சிவபெருமானை, நடராஜர் ரூபத்தில் இந்த திருவாதிரை நட்சத்திரத்தில் நாம் தரிசனம் செய்வது மிக சிறப்பு.