பார் சிறுத்ததால், படை பெருத்ததோ…
படை பெருத்ததால், பார் சிறுத்ததோ…
நேர்செறுத்த நெஞ்சினர்க்கு அரிது நிற்பிடம்…
நெடு விசும்பலால் இடமுமிலையே…!
(#கலிங்கத்துபரணி – #செயங்கொண்டார்)
பொருள்
பார்: உலகம்
சிறுத்ததால்: சிறியதானதால்
படை: போர்ப்படை
பெருத்ததோ: பெரியதானதோ!
நேர்: நேரே
செறுத்த: எதிர்த்த
நெஞ்சினர்க்கு: நெஞ்சை உடைய வீரர்களுக்கு
அரிது: கடினம், இல்லை
நிற்பிடம்: நிற்கும் இடம்
நெடு: நீண்ட
விசும்பு: வானம்
அலால்: இல்லாமல்
இடமும்: வேறு இடம்
இலையே: இல்லையே!
விளக்கம்
*கலிங்கப் போரில் பங்கேற்ற வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அவர்கள் நிற்கும் இப்புவி சிறியது போல தோன்றுகிறதோ! இல்லை, இப்புவி சிறியதாய் இருப்பதால் போர் வீரர்களின் எண்ணிக்கை அதிகமானதாக தோன்றுகிறதோ!!!
*இப்போரில், நேருக்கு நேர் நெஞ்சினை எதிர்த்து போரிடும் வீரர்களுக்கு நிற்பதற்கு இப்போர்களம் போதுமானதாக இல்லை… அவர்கள் நின்று போரிட வேண்டுமானால் நீண்ட ஆகாயத்தை தவிர வேறு இடம் ஏதும் இல்லையே.!.!.!