வெள்ளி இரவு செய்தியாளர்களை சந்தித்த தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா, கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டாம் என்று பி.சி.சி.ஐ.ய தரப்பிலிருந்து விராட் கோலியிடம் கோரிக்கை வைத்தோம். டி20யிலிருந்து விலகினால், ஒருநாள் போட்டிக்கும் கேப்டனை மாற்ற நேரிடும் என்று கோலியிடம் தெரிவித்தோம். ஆனால் அவர் தான் அதனை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் கோலி பொய் சொல்லிவிட்டாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
டி20 கேப்டன் பதவியை விராட் கோலி ராஜினாமா செய்த நிலையில், அவரிடமிருந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. அப்போது, ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன், டி20 க்கு ஒரு கேப்டன்என இருக்க முடியாது என்பதால், தாங்களே இருப் பிரிவுகளிலும் கேப்டனாக தொடர வேண்டும் என்று விராட் கோலியிடம் கூறியதாக பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி கூறினார். ஆனால், இது குறித்து விராட் கோலியிடம் கேட்ட போது, அப்படி யாரும் பி.சி.சி.ஐ.யிலிருந்து என்னிடம் பேசவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் BCCI தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா கூறி இருப்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.