இந்திய ஜனாதிபதியின் ஊதியம் மாதம் ₹500,000/- ஆகும். அதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதிக்கு மாதம் ₹400,000 மற்றும் பிரதமருக்கு ₹280,000 மாதாந்திர ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநில கவர்னர்களின் மாத சம்பளம் ₹350,000 ஆகும். இது பிரதமரின் சம்பளத்தைவிட ₹70,000/- அதிகம் ஆகும்.
இந்தியத் தலைமை நீதிபதி மாதந்தோறும் ₹ 280,000 பெறுகிறார், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ₹250,000 பெறுகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிப்படை சம்பளம் ₹100,000 மற்றும் அலவன்சுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்களின் சம்பளம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. தெலுங்கானா முதல்வர் மாதத்திற்கு அதிகபட்சமாக ₹400,000 பெறுகிறார். டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்கள் முறையே ₹390,000 ₹365,000 மற்றும் ₹340,000 சம்பளம் முதலமைச்சருக்கு வழங்குகின்றன. நாகாலாந்து மற்றும் திரிபுராவில் முதல்வர்களுக்கான மிகக் குறைந்த சம்பளம் முறையே ₹110,000 மற்றும் ₹105,000 ஆகும். சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) மற்றும் சட்டமன்ற கவுன்சில் உறுப்பினர்கள் (எம்எல்சிக்கள்) ஆகியோரின் சம்பளமும் மாநில வாரியாக மாறுபடும். ஒவ்வொரு மாநிலமும் தங்கள் எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிகளுக்கான அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்கிறது, இது நாடு முழுவதும் கணிசமாக வேறுபடுகிறது.