Spread the love

“பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று,

நன்மங்கையரைத் தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் சேய்போல் இருப்பர்கண்டீர்!

உண்மை ஞானம் தெளிந்தவரே!”

விளக்கம்:

பேய்போல் திரிந்து – பிறர் கர்மத்தை போக்கும் பொருட்டு இரவு பகலாக திரிந்து,

பிணம்போல் கிடந்து – உறங்கினாலும் யோக நிலையில் இருந்தாலும் பிணம் போல் அசைவற்று,

இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி- யாராவது இடும் பிச்சையை நாய் போல் உண்டு,

நன்மங்கையரைத் தாய்போல் கருதித்- நல்ல மங்கையரை தனது தாய் போல் நினைத்து,

தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச் – அடிமைபோல் அனைவருக்கும் தாழ்வாய் இருந்து,

சேய்போல் இருப்பர்கண்டீர் – குழந்தைபோல் இருப்பவர்களை கண்டீர்கள் என்றால்,

உண்மை ஞானம் தெளிந்தவரே – அவர்தான் உண்மையாக ஞானம் அடைந்து தெளிந்தவர்.

என்கிறார். ..

பட்டினத்தார்

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *