தேவசகாயம் மவுண்ட் எனப்படும் காற்றாடி மலை தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் அமைந்துள்ள ஒரு கிறிஸ்தவ புனிதத் தலமாகும். இது தமிழ்நாட்டில் நாகர்கோவில் – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தேவசகாயம் பிள்ளை 18 ஆம் நூற்றாண்டில் இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மதம் மாறியவர். அவர் திருவிதாங்கூர் மன்னர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவின் அரசவையில் அதிகாரியாக இருந்தார். 18-ம் நூற்றாண்டில் டச்சுப்படையை தோற்கடித்த மார்த்தாண்ட வர்மா டச்சு கடற்படைத் தளபதி கேப்டன் யூஸ்டாசியஸ் டி லானோய்-ஐ கைது செய்து, பின்பு அவரை தனது ஒரு படைப்பிரிவின் தளபதியாக நியமித்தார். கேப்டன் யூஸ்டாசியஸ் டி லானோய் அவர்களின் குணநலன்களால் ஈர்க்கப்பட்ட தேவசகாயம் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறினார். பின்னர் மதம் மாறிய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போதைய தேவசகாயம் மவுண்ட்-ல் கொலை செய்யப்பட்டார்.
தேவசகாயம் சுடப்பட்டு கீழே விழுந்த இடம், மணி அடித்தான் பாறை போன்றவை இங்குள்ள சிறப்பிடங்கள் ஆகும்.
தேவசகாயம் மவுண்ட் ஆரல்வாய்மொழியிலிருந்து சுமார் 2.5 கிமீ தொலைவிலும், ஆரல்வாய்மொழி இரயில் நிலையத்திலிருந்து 2.5 கிமீ தொலைவிலும், ஆரல்வாய்மொழி பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும், தோவாளையிலிருந்து 2.5 கிமீ தொலைவிலும், தோவாளை இரயில் நிலையத்திலிருந்து 3.5 கிமீ தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 16 கிமீ தொலைவிலும், போத்தப்பணத்திலிருந்து 16 கிமீ தொலைவிலும், 12 கி.மீ. கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து 94 கி.மீ. அருகிலுள்ள இரயில் நிலையங்கள் ஆரல்வாய்மொழி மற்றும் தோவாளையில் அமைந்துள்ளன. அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது