கன்னி மூலை என்பதை தென்மேற்கு மூலை என்றும் நைருதி அல்லது நிருதி என்றும் சொல்வார்கள் .மேலும் இதை குபேர மூலை என்றும் சொல்லலாம்.இந்த கன்னி மூலையை ஆங்கிலத்தில் South West corner என்று சொல்வார்கள்.
முதலில் இந்த கன்னிமூலை எந்த பகுதியை குறிக்கும் என்பதை படத்தில் பார்க்கலாம்
தெற்கு (south) திசையும் மேற்கு (west) திசையும் இணையும் மூலத்திசை தென்மேற்கு மூலை அல்லது கன்னிமூலை(southwest corner)என்று அழைக்கப்படும்.
இந்த கன்னிமூலை வாஸ்துப்படி எப்படி இருக்க வேண்டும் என்பதை இனி பார்க்கலாம்
- மனையின் மற்ற பகுதிகளை விட கன்னிமூலை சற்று உயரமாக இருக்க வேண்டும்
- கன்னிமூலை சரியாக 90° டிகிரி இருக்க வேண்டும்.
- இந்த தென்மேற்கு மூலையில் பள்ளமான அமைப்புகள் இருக்க கூடாது.
- இதன் அருகிலேயே தாழ்வான நில அமைப்பு,கிணறு,போர்வெல், செப்டிக்டேங்க் போன்றவைகள் வரக்கூடாது.
- வீட்டிற்கு தலைவாசல் இந்த தென்மேற்கு மூலையில் கட்டாயம் வரக்கூடாது.மேலும் காம்பவுண்ட் கேட் இந்த பகுதியில் அமைக்க கூடாது.
- வீட்டிற்கு வெளியே காலியிடம் விடும்போது தென்மேற்கு பகுதியில் (தெற்கு மற்றும் மேற்கு பகுதி முழுவதும்) குறைவான காலியிடம் விட வேண்டும்
- உயரமாக வளரக்கூடிய மரங்களை வளர்க்கலாம்.
- மாடியில் இந்த பகுதியில் அறை அமைக்கலாம்.
- வீட்டில் இந்தப்பகுதி திறந்து இல்லாமல் மூடி இருக்க வேண்டும் (கதவு,ஜன்னல்,பால்கனி போன்றவைகள்இல்லாமல்)
- வீட்டில் கணவன் மனைவி தூங்கும் படுக்கை அறை இங்கே அமைப்பது நல்லது.
- வீட்டிற்கு உள்ளே மாடிப்படி கன்னிமூலையில் அமைக்க வேண்டாம்.
- கழிவறை (டாய்லெட்) இந்த பகுதியில் அமைக்க வேண்டாம்
- இதன் அருகிலேயே உயரமான கட்டிடங்கள் இருப்பது வாஸ்துப்படி நமக்கு நல்லது
- வீட்டிற்கு உள்ளே பூமிக்கடியில் அமைக்கும் பாதாள அறைகள் இங்கே அமைக்க கூடாது.
- மொத்தத்தில் இந்த கன்னிமூலை பாரமாகவும், மூடியும் இருக்க வேண்டும்.
இந்த பதிவை பொறுமையாக படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
நலமுடனும் வளமுடனும் வாழ்க🙏.