Spread the love

கனவில் காணும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அவ்வகையில், கறுப்பு நிற அன்னப் பறவையைக் காண்பது நன்மையானது அல்ல. இளம் வயதில் உள்ள ஓர் இளைஞன் கனவில் கறுப்பு நிற அன்னம் தோன்றுமானால், அவன் வாழ்வில் பெரும் ஏமாற்றங்களுக்கு, விரக்திகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். மேலும் அந்த இளைஞனின் தன்மானத்துக்கு இழுக்கும், நற்பெயருக்கு களங்கமும் உண்டாகும்.

திருமணமாகாத இளம் பெண் ஒருத்தியின் கனவில் கறுப்பு அன்னப் பறவை கனவில் வந்தால், வெகு விரைவில் அப்பெண் ஏதேனும் வருத்தத்துக்கு உரிய செய்தியைக் கேட்க நேரிடலாம். அதே சமயம் வெள்ளைநிற அன்னத்தைக் காண்பவர் வாழ்க்கை மகிழ்ச்சியும், இன்பங்களும் அதிகம் நிறைந்ததாக இருக்கும்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *