கேரளாவில் லாட்டரி விற்பனை சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இதன்காரணமாக கேரளாவில் லாட்டரி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஓனம் பம்பர் லாட்டரி குலுக்கள் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடியாகும். இதில் டிஇ 645465 என்ற எண்ணிற்கு முதல் பரிசு ரூபாய் 12 கோடி விழுந்துள்ளது. அந்த லாட்டரி சீட்டுக்கு சொந்தக்காரர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. டிவி, ரேடியோக்களில் இந்த செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த லாட்டரி சீட்டு மீனாட்சி லாட்டரிஸ் என்ற இடத்தில் இருந்து ரூ.300 க்கு விற்கப்பட்டது என்ற தகவல் மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில் துபாயில் வேலைப்பார்க்கும் வயநாட்டைச் சேர்ந்த சைதல்வி என்ற நபர் அந்த லாட்டரி சீட்டுக்கு உரிமை கூறினார்.. சைதல்வி கடந்த 11 வருடங்களாக துபாயில் சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். ஓனம் பம்பர் லாட்டரி குலுக்கலில் லாட்டரில் வாங்கும்படி கோழிக்கோட்டில் உள்ள தன் நண்பரிடம் கூறியதாகவும். இதற்காக நண்பருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதாகவும் அவரும் லாட்டரி சீட்டை வாங்கி அந்த எண்ணை இவருக்கு போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்ததாக கூறியிருந்தார்.
ஹோட்டல் ஊழியருக்கு லாட்டரி அடித்ததை கேள்விப்பட்ட அவரது நண்பர்கள் கொண்டாடித்தீர்த்தனர். ஆனால் உண்மையில் சைதல்விக்கு லாட்டரி அடிக்கவில்லை. அவரது நண்பர் அவரை ஏமாற்றுவதற்காக இணையத்தில் வெளியான பரிசு விழுந்த லாட்டரி எண்ணை விளையாட்டாக அனுப்பி அவரை சீண்டியது பின்னர் தெரியவந்தது. இதன்காரணமாக குழப்பம் நிலவியது.