பாதுகாப்பு படை நியமனங்களில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய பாதுகாப்பு துறையில் அதிக இளைஞர்களை கொண்டிருக்கும். இந்த திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்கள் 4 வருட ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் அக்னி வீர் என்றும் அழைக்கப்படுவர். இவர்களுக்கு சம்பளம், கொடுப்பனவுகள் என அனைத்து சலுகையும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணபிக்கலாம்?
மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் ராணுவம், கப்பல், விமான படை என மூன்று பிரிவுகளிலும் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் இவர்கள், 17 1/2 வயது முதல் 21 வயதுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வயதுவரம்பில் தளர்வு மூன்று ஆண்டுகள் வரை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிரந்தர பணிக்கான வாய்ப்பு
இந்த அக்னி வீரர்களில் 25% பேர் வழக்கமான பணிகளுக்கு (Regular cadre) கீழ் கொண்டு வரப்படுவார்கள்.
இந்த 4 ஆண்டுகால பணிக்கு பிறகு 10 லட்சம் ரூபாய் சேவ நிதி பேக்கேஜ் வழங்கப்படும். இது வட்டியுடன் சேர்த்து 11.71 லட்சம் ரூபாயாக கிடைக்கலாம்.
சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?
முதல் ஆண்டில் சம்பளம் – ரூ.30,000, பிடித்தம் போக ரூ.21,000 கிடைக்கும். இதில் அக்னி வீர் கார்ப்பஸ்-க்காக 9000 ரூபாய் செலுத்தப்படும்.
இரண்டாம் ஆண்டில் 33,000 ரூபாய் சம்பளம், கையில் 23,100 ரூபாய் கிடைக்கும். இதில் 9,900 ரூபாய் அக்னிவீர் கார்ப்பஸிக்கு செல்லும்.
3ம் ஆண்டில் 36,500 ரூபாய் சம்பளம் கிடைக்கும். இதில் 25,580 ரூபாய் சம்பளம் கையிலும், 10,950 ரூபாய் அக்னி வீர் கார்ப்பஸ் ஆகவும் செல்லும்.
4வது ஆண்டில் 40,000 ரூபாய் சம்பளம் ஆகும். இதில் கையில் 28,000 ரூபாய் சம்பளமும், 12,000 ரூபாய் அக்னிவீர் கார்ப்பஸ்-க்கும் செல்லும்.
அக்னி வீர் கார்ப்பஸ் (சேவா நிதி பேக்கேஜ்)
4 ஆண்டுகளில் இந்த அக்னிவீர் கார்ப்பஸ்-க்கு (சேவா நிதிக்கு) நீங்கள் செலுத்தும் தொகை 5.02 லட்சம் ரூபாயாகும். இதே பங்கினை இந்திய அரசும் செலுத்தும். ஆக இறுதியால 4 ஆண்டுகள் கழித்து, வட்டியுடன் சேர்த்து உங்காளுக்கு 11.71 லட்சம் ரூபாய் கிடைக்கலாம். இந்த சேவா நிதிக்கு வருமான வரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
இந்த அருமையான திட்டத்தை இளைஞர்கள் பயன்படுத்தி தேச சேவைக்கு வரவேண்டும்.