Tag: Seethalai saathanar

சிலப்பதிகாரம்- புகார் காண்டம்- நாடுகாண் காதை

வான்கண் விழியா வைகறை யாமத்துமீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்கார்இருள் நின்ற கடைநாள் கங்குல்ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்பஏழகத் தகரும் எகினக் கவரியும் தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும்தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு,அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்தமணிவண்ணன் கோட்டம்…

சிலப்பதிகாரம்- புகார் காண்டம்- கனாத்திறம் உரைத்த காதை

அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லைநிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்தமாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர்கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள, மேல்ஓர்நாள்:மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப் பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும்பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டுஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டுஅமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்புகர்வெள்ளை நாகர்தம்…

சிலப்பதிகாரம்- புகார்க் காண்டம்-வேனில் காதை

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டுமாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின் மன்னன் மாரன் மகிழ்துணை ஆகியஇன்இள வேனில் வந்தனன் இவண்எனவளம்கெழு பொதியில் மாமுனி பயந்தஇளங்கால் து¡தன் இசைத்தனன் ஆதலின்மகர வெல்கொடி…

சிலப்பதிகாரம்- புகார்க் காண்டம்-கானல் வரி

சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்துமைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்றுஇத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கிபண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்நண்ணிய குறும்போக்கு என்று நாட்டியஎண்வகையால் இசைஎழீஇப்பண்வகையால் பரிவுதீர்ந்துமரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படரவார்தல்…

சிலப்பதிகாரம்- புகார்க் காண்டம்-கடலாடு காதை

வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடுவிருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள் இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎனக்கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக்கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்ததொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகிநெஞ்சுஇருள் கூர…