ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பெண் மசாஜ் தெரபிஸ்ட்டை நியமித்துள்ளது. இதன் மூலம் பெண் துணை ஊழியரை நியமித்த முதல் ஐபிஎல் அணி என்ற பெருமை பெற்றுள்ளது.
இதன் மூலம் பெண் துணை ஊழியரை நியமித்த முதல் ஐபிஎல் என்ற பெருமை பெற்றது ஆர்சிபி. இதுதொடர்பாக ஆர்சிபி அணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,‘நவ்னிதா கவுதம் 13வது ஐபிஎல் தொடரின் ஸ்போர்ட்ஸ் மசாஜ் தெரபிஸ்ட்டாக இணைந்துள்ளார். அணி வீரர்கள் தயாராக மற்றும் விரைவாக குணமடைய நவ்னிதா கவுதம் உதவுவார். பெண் துணை ஊழியரை நியமித்த முதல் ஐபிஎல் அணி என்பதில் பெருமை கொள்கிறோம்,’ என அதில் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் செப்டம்பர் 20 அன்று RCB Vs KKR மேட்ச் நடந்தது. RCB ஸ்கோர் 53/4 ஆக இருந்தபோது, கேமிராமேன் ஜமீசன் உட்கார்ந்திருந்த இடத்தை கவர் செய்தார். கேமரா ஜெமீசனில் இருந்தபோது, அவர் டக்அவுட்டில் உட்கார்ந்திருந்த நவ்னிதா கவுதமைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். ஜெமீசன் சுறுசுறுப்பாக சிரிப்பதை கேமரா பிடித்தவுடன், அந்தக் காட்சிகள் வைரலானது.