ஒரு காரியத்துக்கு செல்லும்போது தென்படும் சகுனங்களைப் பற்றி பார்க்கலாம்.
நல்ல சகுனங்கள்
சுப சகுனங்களாக வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, பட்டத்து யானை அல்லது கோயில் யானை இவைகளைப் பார்ப்பதும், இவைகளின் ஒலிகளைக் கேட்பதும் சிறந்த நற்சகுனங்கள் ஆகும்.
மேலும் அழகிய பெண்கள், நாட்டியப் பெண்கள், தயிர், இரட்டை பிராமணர்கள், மஞ்சள் கலந்த அரிசி(அட்சதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னிப் பெண்கள், கருடன்,ஆலய மணி ஓசை, விளக்கு, தாமரைப் பூ, நாய் தன் உடலை சிலிர்ப்பது, பிணம் எதிரே வருவது, பசு மாடுகள் இவைகளைக் காண்பது சுப சகுனமாகும்.
சுமங்கலிப்பெண், கன்னிப்பெண், சங்குநாதம், மங்கலவாத்தியம், சுபக் கூட்டம், நிறை குடம், தாசி, வேத ஓசை, மணமக்கள், அட்சதை, கட்டுச்சோறு, இரட்டை சலவைத்தொழிலாளி, இரண்டு பூரண கும்பங்கள், பூக்கள், பழங்கள், அரசன், நெருப்பு, பறவைக்கூட்டம், பிரேதம், குதிரை, யானை, காளை, மாமிசம், முத்து, தயிர், நெய், கள், பொறி, தேன், குடை, சாமரை, கொடி, கரும்பு, கழுதை, நாய், மூஞ்செலிசத்தம், ஆந்தை கிளைக் கூட்டல், கழுதை, இவை தென்பட்டால் நல்ல சகுனங்கள் ஆகும் .
கழுகு, கருடன், கீரி, உடும்பு, குரங்கு, நாய், ஆந்தை, அணில் இவைகள் வலமிருந்து இடமாக போனால் நல்ல சகுனம் ஆகும்.
நரி, கிளி, காகம், மயில், கொக்கு, ஓனான், கோழி, மான் இவைகள் இடமிருந்து வலமாக போனால் நல்ல சகுனம்.
பறவைகள் கூட்டமாகப் கத்தாமல் பறந்தால் சுப சகுனம்.
ஒரு காரியத்தைத் தொடங்கும் பொழுது கோவில் மணி ஒலித்தால் காரிய வெற்றி கிட்டும். வீட்டிலிருந்து வெளியில் புறப்படும் பொழுது தண்ணீர் நிறை குடமாக வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
அதேபோல் பால், பூத்தட்டு, உப்பு மூட்டை வந்தால் காரியம் உடனடியாக நிறைவேறும். கர்ப்பிணிப் பெண் எதிரில் வந்தால் தொழிலில் தன லாபம் பெருகும். காகம் இடமிருந்து வலமாகச் சென்றால் எடுத்த காரியங்கள் இனிதே வெற்றி பெறும்.
கழுதை கத்தினால் நல்ல சகுனம். காரணம், அது உறவைத் தேடிக் கத்துகிறது.
காக்கை கரைந்தாலும், கழுதை கத்தினாலும் உறவு வருகிறது. பூனை வலமிருந்து இடமாகப் போனால் துன்பம் விலகுகிறது.
நரி வலம் நல்லது’ என்பார்கள். சிலர் நரி எந்தப் பக்கம் போனாலும் நல்லது என்பார்கள்.
அடுத்ததாக மரத்தில் ஏதாவது ஒரு உயிரினம் மேலே ஏறுவது போல காட்சியைக் கண்டால், அது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை தேடி தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஓணான் ஏறுவது, அணில் ஏறுவது அல்லது குரங்கு, பூனை போன்ற விலங்குகள் ஏறுவது போல், காட்சியை கண்டாலும் அது உங்களுக்கான ஏறுமுகம் என்று சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.
நீங்கள் வெளியே கிளம்பும்போது, உங்களின் இடது பக்கத்தில் இருந்து, வலது பக்கத்திற்கு காகம் பறந்து சென்றால், அது உங்களுக்கு அதிர்ஷ்டம், நல்ல சகுனம் என்று சொல்லப்பட்டுள்ளது.
அது போல் காலையில் வேலைக்கு அல்லது சுபகாரிய விஷயங்களுக்காக வெளியில் செல்லும் முன் மங்கல ஒளியான நாதஸ்வர சத்தத்தையும், தாள சத்தத்தையும் கேட்டு விட்டு சென்றால், செல்லும் காரியம் வெற்றி அடையுமாம். இதற்காகவே இந்த சத்தத்தை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக உங்களை வழி அனுப்புபவர்கள் நல்ல வார்த்தை சொல்லி வழியனுப்பினால் செல்லும் காரியம் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை
கெட்ட சகுனங்கள்
மழைபெய்தல், இடி இடித்தல், தூரல் போடுதல், தும்மல் போடுதல், ஓங்காரமிடல், சண்டை போடுதல், கொக்கரித்தல், பன்றி உறுமுதல், பூனை கத்துதல், தலைதட்டுதல், துணி அவிழ்தல், போகாதே என்ற குரல், கால் இடறி விழுதல், சாப்பிட்டுபோ என்ற குரல், எங்கே போகிறாய் என்ற குரல், கூட வருகின்றேன் என்ற குரல் போன்றவை கெட்ட சகுனம் ஆகும்.
பறவைகள் கூட்டமாகப் கத்திக் கொண்டே பறந்தால் அபசகுனம்.
பூனை, வெற்றுக் குடம் சுமந்த பெண், விதவைப் பெண், கூன் குருடு போன்றோர் குறுக்கிட்டால் இதனை கெட்ட சகுனம்
இரவு நேரத்தில் வீட்டில் ஆந்தை கத்தினால் இது கெட்ட சகுனம்.
அதுபோல், எழுதும்போதோ, கோடு போடும்போதோ இடமிருந்து வலமாகப் போடுகிறோம். அதனால், பூனை இடமிருந்து வலமாகப் போனால் துன்பம் வருகிறது. காரணம், எழுத்திலே செலவும் எழுதலாம்; வரவும் எழுதலாம்; இல்லையா? மண ஓலையும் எழுதலாம்; மரண ஓலையும் எழுதலாம்; இல்லையா? இடமிருந்து வலம் எப்போதும் சந்தேகத்திற்கு உரியது. அதனால் ‘யானை, வலம் போனாலும், பூனை வலம் போகக்கூடாது’ என்பார்கள்.
குரைக்கின்ற நாய் ஓலமிடத் தொடங்கினால், அந்த ஒலியே அவலமாக, மரண ஓலமாகப் படுகிறது. அதை ஏதோ ஒரு மரணம் பற்றிய முன்னறிவிப்பு என்று நம்பினார்கள்.
தூக்கத்தில் சூரியன் நம்மில் விழுவது கூட தெரியாமல் தூங்கக் கூடாது என்கிறது சகுன சாஸ்திரம். அப்படி தூங்கும் பொழுது சூரியன் நம் மேல் விழுந்தால், நாம் செய்கின்ற எல்லா காரியங்களும் தடைகளாக வந்து சேருமாம். இது நமக்கு தரித்திரத்தை உண்டாகும் என்று கூறப்படுகிறது.
பறந்து கொண்டிருக்கும் காகம் தலையில் எச்சம் அடித்தால் கெட்டது நடக்கப் போகிறது என்று சொல்லுவார்கள்.
நீங்கள் ஒரு நல்ல காரியத்திற்காக வெளியில் புறப்படும் பொழுது கூந்தலை விரித்துக் கொண்டு யாராவது உங்கள் கண்களுக்கு தெரிந்தால் சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்வது நல்லதாம். இது போல் கால் தடுக்கும் பொழுது சிறிது நேரம் அமர்ந்து விட்டு, தண்ணீர் அருந்தி விட்டு செல்லுமாறு கூறுவார்கள். அதே போல தான் இந்த விஷயமும் என்கிறார்கள். அதில் விதி விலக்காக நீங்கள் பார்க்கும் தலைவிரி கூந்தலில் பூக்கள் சூடியிருந்தால் அது சுப சகுனமாக பார்க்கப்படுகிறது. அதனால் தாராளமாக நீங்கள் வெளியே செல்லலாம் என்கிறார்கள்.