உடலுறவு மற்றும் பாலியல் சம்பந்தமான கனவுகள் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா??
பாலியல் தொடர்பான கனவுகள் வருவது இயல்பான ஒன்று. ஆனால் தொடர்ச்சியாக பாலியல் மற்றும உடலுறவு சம்பந்தமான கனவுகள் வந்தால், அது உங்களிடம் உள்ள உறுதியற்ற இயல்பைக் குறிக்கிறது அல்லது நீங்கள் அடைய விரும்பியதை வாழ்வில் அடைய முடியாது என்று அர்த்தம். தொடர் பாலியல் கனவுகள் வருதல் உங்கள் மனம் பாலியல் உறவுக்கு ஏங்குகிறது என்பது பொருள். ஆகவே நீங்கள் திருமண வயதை எட்டியவர் எனில் உடனே திருமணம் செய்து உங்களது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். மாணவ மாணவியருக்கு இவ்வாறான கனவுகள் அவ்வப்போது வருவது இயல்பு. தினமும் இதுபோன்ற கனவுகள் வருமாயின் மாணவர்களால் படிப்பில் கவனச் சிதறல் ஏற்படும். இவ்வாறான சூழ்நிலையில் மாணவர்கள் ஆன்மீகம் மற்றும் யோகாவில் கவனம் செலுத்துவதின் மூலம் இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட இயலும்.