திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்பது வியப்பாக உள்ளது.
திருக்குறளில் அனிச்சம், குவளை என்ற இருமலர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
திருக்குறளில் ‘னி’ 1705 முறை பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதுவே அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து ஆகும்.
திருக்குறளில் ‘ளீ, ங’ ஆகிய எழுத்துக்கள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ‘ஒன்பது” ஆகும்.
திருக்குறளில் நெருஞ்சிப்பழம் என்கிற பழம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
திருக்குறளில் இடம் பெற்றுள்ள ஒரே விதை குன்றிமணி ஆகும்.
திருக்குறளில் பனை, மூங்கில் என்ற இரண்டு மரங்கள் குறிப்பிட்டுள்ளது.
திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து – ஒள.
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-ல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.