குறள் 319
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
[அறத்துப்பால், துறவறவியல், இன்னாசெய்யாமை]
உரை
பிறருக்கு / பிறர் உயிர்களுக்கு நாம் ஒரு தீங்கினை(துன்பத்தினை) காலையில் இழைத்தால் நமக்கு ஒரு தீங்கு மாலையில் தானாக தேடி வரும். ஆதலால் பிறருக்கு தீங்கு செய்யாதே என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
நாம் பிறருக்கு ஒரு தீங்குச் செய்து இருப்போம். அவர் நமக்கு அத்தீங்கை (அல்லது வேறொருத் தீங்கை) பதிலுக்குச் செய்வார் என்றில்லை (அவர் அறச்செல்வராக அல்லது பொறுமைவாய்ந்தவராக இருந்தால் பதிலுக்கு செய்யமாட்டார். அல்லது பதிலுக்கு அவர் நமக்கு செய்யக்கூடும் (செய்யும் வலிமை வாய்ந்தவர்) என்று நாம் அறிந்திருந்தால் நாமே அவருக்கு செய்யமாட்டோம்). நமக்கு வேறொருத் தீங்கு இயற்கையின் மூலமாகவோ அல்லது வேறொருவரின் மூலமாகவோ தானே வந்து சேரும். அதனால்தான் “தாமே வரும்” என்று கூறினார் திருவள்ளுவர்