மெக்சிகோவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சிறுநீரகத்தை தனது காதலியின் தாயாருக்கு தானம் செய்ததாகவும், ஆனால் ஒரு மாதத்திற்குள் காதலி அவரைவிட்டு விலகியதாகவும் கூறியுள்ளார். தி சன் செய்தியின்படி , மெக்சிகோவை சேர்ந்த உசியேல் மார்டினெஸ் , தனது சிறுநீரகத்தை தனது தாய்க்கு தானம் செய்த ஒரு மாதத்திற்குள் அவரது காதலியால் கைவிடப் பட்டார்.
ஆசிரியரான உசியேல், ஒரு TikTok வீடியோவில், தனது காதலியின் தாயின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானம் செய்ததாகக் கூறினார். ஆபரேஷன் முடிந்து ஒரு மாதம் கழித்து காதலி அவரை தூக்கிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
- காதலியின் தாய்க்கு சிறுநீரகத்தை தானம் செய்த மெக்சிகன் ஆண், சில வாரங்களுக்குப் பிறகு வேறொருவருக்காக தூக்கி எறியப்படுகிறான்
- “நான் அவளது தாய்க்கு சிறுநீரகத்தை தானம் செய்தேன், அவள் என்னை விட்டுவிட்டு வேறு ஒருத்தனை திருமணம் செய்துகொண்டாள்: டிக்டாக் வீடியோவில் உஜில் மார்டினெஸ்
- TikTok வீடியோ இன்றுவரை 16 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது
.இதயத்தை உடைக்கும் இந்த சம்பவத்தில், ஒரு நபர் தனது காதலியால் ஏமாற்றப்படுகிறார் – அவர் தனது சிறுநீரகத்தை காதலியின் தாயாருக்கு தானம் செய்த சில வாரங்களுக்குப் பிறகு.
“நான் அவங்க அம்மாவுக்கு கிட்னி கொடுத்தேன், ஒரு மாசம் கழிச்சு அவ என்னை விட்டுட்டு வேறு கல்யாணம் பண்ணிக்கிட்டா.
ஒரு ஆசிரியரான உசியேல், ஒரு TikTok வீடியோவில், தனது காதலியின் தாயின் உயிரைக் காப்பாற்ற தனது சிறுநீரகத்தை தானம் செய்ததாகக் கூறினார். ஆபரேஷன் முடிந்து ஒரு மாதம் கழித்து காதலி அவரை தூக்கிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். TikTok வீடியோ இன்றுவரை 16 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.
கமெண்ட் பகுதியில் அவருக்கு பலரும் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
“அவ்வளவு சோகமாக இருக்காதே, அவள் ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டாள். தொடர்ந்து முன்னேறி, உன்னைப் பாராட்டும் சரியான பெண்ணைக் கண்டுபிடி” என்று ஒரு வார்த்தையுடன் உசிலுக்கு நெட்டிசன்கள் ஆதரவைப் பொழிந்தனர்.
மற்றொரு வீடியோவில், “உண்மையில் நான் நன்றாக இருக்கிறேன், நான் உணர்ச்சிவசமாக நன்றாக இருக்கிறேன், அவள் அப்படித்தான் என்று நான் நினைக்கிறேன், எனக்கு எதிராக எதுவும் இல்லை, நாங்கள் நல்ல உறவில் இருக்கிறோம்” என்று அவர் கூறினார். அவர்கள் நண்பர்கள் இல்லை, ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கவில்லை என்று அவர் கூறினார்.
வீடியோ இதோ…