இந்தியா vs தென்னாப்பிரிக்கா: இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் டக் அவுட் செய்யப்பட்டதற்கு, முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் அவரது ஷாட் தேர்வு குறித்து விமர்சித்தார்.
இக்கட்டான சூழலில் ரிஷப் பண்ட் ஆடுகளத்திற்கு வந்தார். ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை தடுக்கும் விதமாக தென்னாப்பிரிக்க வீரர்கள், ஒரு யுத்தியை கையாண்டனர். ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்த ஷாட் பால் வீசப்பட்டது
இதனால் கடுப்பான ரிஷப் பண்ட், அடுத்த பாலை இறங்கி வந்து தேவையில்லாத ஷாட் அடிக்க முயன்றார். அப்போது பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சிக்கியது.இதனால் ரிஷப் பண்ட் டக் அவுட்டாக, தென்னாப்பிரிக்க வீரர்கள் அவரை கிண்டல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரிஷப் பண்ட், டிரெஸிங் ரூம்க்கு செல்லும் வகையில் வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பாதையில் இருந்த கம்பியை பேட்டால் ஓங்கி அடித்தார்.
கமென்டரி கூறிய சுனில் கவாஸ்கர் ரிஷப் பந்த் மீது கடும் விமர்சனம் செய்தார் “கொஞ்சமாவது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.