வீட்டிற்கும் காம்பவுண்ட் சுவருக்கும் இடையே காலியிடம் விடுவதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
நமது வீட்டை சுற்றி நான்கு புறமும் இடைவெளி விட்டுத்தான் சுற்று சுவர் கட்ட வேண்டும்.இதில் பொதுவாக வடகிழக்கு,வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிக காலியிடமும் தென்மேற்கு,தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குறைந்த காலியிடமும் இருக்க வேண்டும்.இதை இன்னும் விளக்கமாக படங்களின் உதிவியுடன் பார்ப்போம்.
தெற்கு மற்றும் வடக்கு பகுதி காலியிட அமைப்பு
தெற்கு மற்றும் வடக்கு பகுதி காலியிடத்தை பொறுத்தவரையில் தெற்கு பகுதியை விட வடக்கு பகுதியில் அதிக அளவு காலியிடம் விட வேண்டும்.
கிழக்கு மற்றும் மேற்கு பகுதி காலியிட அமைப்பு
கிழக்கு மற்றும் மேற்கு பகுதி காலியிடத்தை பொறுத்தவரையில் மேற்கை விட கிழக்கில் அதிக காலியிடம் விட வேண்டும்.
மேலே கூறியபடி வீட்டை சுற்றி காலியிடம் அமைக்கும்போது,ஆக்க சக்தி சரியான இடம் வழியாக நமது வீட்டிற்குள் வரும்.
இந்தப் பதிவை படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. நலமுடனும் வளமுடனும் வாழ்க🙏.