இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் (Yuvraj Singh) மற்றும் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) ஆகியோர் இன்ஸ்டாகிராமில் சஹாலின் (Chahal) டிக்டாக் வீடியோ பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குறிப்பிட்ட ஒரு வார்த்தையை கூறி சஹாலை யுவராஜ் சிங் கிண்டலாக பேசினார். யுவராஜ் சிங் கூறிய அந்த வார்த்தை பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
இதனை அடுத்து சமூக வலைதளங்களில் யுவராஜ் மீது கடும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு அப்போதே யுவராஜ் சிங் மன்னிப்பு கோரினார். அதில், ‘நான் ஒருபோதும் நம் நாட்டு மக்களிடையே சாதி, நிறம் பாலின பாகுபாடுகளுடன் பழகியதில்லை. என் நண்பருடன் பேசியது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது. என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால், பொறுப்புள்ள இந்திய குடிமகனாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.