Spread the love

வீடு கட்ட சிறந்த மனைகளின் வடிவம் (plot shapes)பற்றி தெரிந்து கொள்வோம்

சதுர மனை

சதுர மனை

ஒரு மனையின் நான்கு பகுதிகளும் ஒரே அளவில் இருந்தால் அது சதுர மனை ஆகும்.அதாவது இந்த வகை மனையில் நீளம் மற்றும் சதுரம் சம அளவில் இருக்கும்.இந்த மனைகள் சுகங்களையும் நல்ல வளங்களையும் தரக்கூடியதாக இருக்கும்.

செவ்வக மனை

செவ்வக மனை

1:2 என்ற விகிதத்தில் அமைந்த மனைகள் செவ்வக மனைகள் ஆகும்.அதாவது ஒரு பங்கு அகலமும் இரண்டு பங்கு நீளமும் கொண்டவைகளாக இருக்கும்.இந்த வகை மனைகள் செல்வ செழிப்பை தரக்கூடியதாக இருக்கும்.

குறிப்பு : ஆனால் இந்த அளவு 1:2 என்பதை விட அதிகமாக போகும்போது, அதாவது 1:3 ,1:4 அல்லது அதற்கு மேலாக இருந்தால் அந்த மனைகள் நல்லது அல்ல.

ஈசான்யம் வளர்ந்த மனை (கிழக்கு வளர்ந்து- ஈசான்ய வளர்ச்சி )

கிழக்கு வளர்ந்து – ஈசான்யம் வளர்ந்த மனை

மனையின் வடகிழக்கு பாகத்தில் கிழக்கு வளர்ந்து இருக்கும் மனைகள் ஈசான்யம் வளர்ந்த மனைகள் ஆகும்.இந்த வகை மனைகளும் சிறந்தவைகள் தான்.

குறிப்பு : இந்த வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டும்போது சிறப்பானதாக இருக்காது.

ஈசான்யம் வளர்ந்த மனை(வடக்கு வளர்ந்து – ஈசான்ய வளர்ச்சி)

வடக்கு வளர்ந்து – ஈசான்யம் வளர்ந்த மனை

மனையின் வடகிழக்கு பாகத்தில் வடக்கு வளர்ந்து இருக்கும் மனைகள் ஈசான்யம் வளர்ந்த மனைகள் ஆகும்.இந்த வகை மனைகளும் வருமானத்தை அதிகப்படுத்தி வளர்ச்சியை தரக்கூடியதாக இருக்கும்.

குறிப்பு : இந்த வளர்ச்சியும் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டும்போது நல்ல மனையாக இருக்காது.

ஆகவே நல்ல மனைகளை தேர்வு செய்து வாஸ்துப்படி வீட்டை கட்டி வாழ்ந்தால் நல்ல பலன்களை தருவதாக இருக்கும்.

இந்தப் பதிவை படித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

நலமுடனும் வளமுடனும் வாழ்க 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *