Spread the love

பெரிதும் எதிர்பார்க்கப்படும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. முதல் கட்டமாக திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 31 கி.மீ தரைவழி வழித்தடம் மற்றும் திருமங்கலம் – வசந்த நகர் வரை உயர் நிலை பாலம் வழியான வழித்தடம், வசந்தநகர் – தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை 10 மீ. ஆழத்தில் பூமிக்கடியில் சுரங்க வழித்தடம், தல்லாகுளம் – ஒத்தக்கடை உயர்நிலை பாலம் கொண்ட வழித்தடம் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 32 கி.மீ. தூரத்தில் 5 கி.மீ. சுரங்கப் பாதையிலும், எஞ்சிய 27 கி.மீ. தூரம் மேல்நிலை வழித்தடமாகவும் அமைக்கப்படும். மொத்தம் 27 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றில் 3 நிலையங்கள் பூமிக்கு அடியில் அமைய உள்ளது.

மதுரை ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையத்தை ஒருங்கிணைத்து ஒன்றும், மீனாட்சி அம்மன் கோயில், கோரிப்பாளையம் என 3 சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த பணிகள் நிறைவடைய ஏழரை ஆண்டுகள் தேவைப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மெட்ரோவிற்கான டெண்டர் நிறைவு பெற்றுள்ளதால் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *