Spread the love

பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் 52-ம் படலமான தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் மிகவும் சுவாரசியமானது. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திருவிளையாடல் திரைப்படத்தில் இது மிகவும் அற்பதமாக திரையாக்கம் பெற்றிருக்கும். திரைப்படத்தில் காட்டியது உண்மையா? புராணம் கூறுவது என்ன? இறையனாரின் பாடலின் அடிப்படையில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண்டு என்பதே உண்மை. கற்புக்கரசி மகளிருக்கும், தேவலோகப் பெண்களுக்கும், ஞானப்பூங்கோதையான பார்வதி தேவிக்கும் இயற்கையாக கூந்தலுக்கு மணம் இல்லை என்ற கீரனின் வாதம் ஏற்புடையதா? அவர்களின் கூந்தலுக்கு மணம் இல்லை என்று கீரன் எதன் அடிப்படையில் வாதிட்டார்? தலைமைப்புலவன் என்ற ஆணவமே காரணம்.

வங்கிய சூடாமணி பாண்டியன் என்பவன் மதுரை ஆட்சி செய்து வந்தான். அவன்‌ சண்பகப்பிரியனாக இருந்‌தான்‌. அதனால்‌ அவன்‌ சண்பகவனம்‌ ஒன்று அமைத்‌தான்‌. அதனால்‌ அவனுக்குச்‌ செண்பகப்‌பாண்டியன்‌ என்று சிறப்புப்‌ பெயரும்‌ அமைந்தது மணம்‌ சுமழும்‌ சண்பக வனத்தில்‌ அவ்வப்‌ பொழுது தன்‌ அரசமாதேவியோடு சென்று தென்றல்‌ சுகத்தையும்‌ பூவாசத்தையும்‌ நுகர்வது
உண்டு.கோடையில்‌ இளவேனிற்காலத்தில்‌ ஒரு நாள்‌
வெப்பம்‌ தாங்காது குளர்ச்சியை நுகரும்‌ பொருட்டுத்தன்‌ தேவியோடு இளம்‌ பூங்காவிற்குச்‌ சென்றான்‌; அவளைக்‌ கட்டி அணைப்பதற்கு முன்‌ பூ மணம்‌ கமழும்‌ அவள்‌ கூந்தலைத்‌ தொட்டு மகிழ்ந்தான்‌. கூந்தலுக்கு இயற்கை மணமா என்ற ஐயத்தோடு அவன்‌ அரசவை அடைந்தான்‌. ௮௧ வாழ்க்கையில்‌ ஏற்பட்ட ஐயம்‌ போக்க அதைப் பொதுப்பட வைத்துப்‌ புலவர்களின்‌ ஆய்வுக்கு விட முற்பட்டான்‌. எனினும்‌ அவன்‌ உள்ளக்‌ கிடக்கையைப்‌
பளிச்சிட்டுச்‌ சொல்ல அவன்‌ மானம்‌ அவனைத்‌ தடுத்தது, அதனால்‌ அவன்‌ ஒரு பொற்கிழியைக்‌ கோயிலில்‌ முன்‌ வைத்து ஓர்‌ அறிவிப்புச்‌ செய்தான்‌, தான்‌ உள்ளத்தில்‌ கொண்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் விதம் கவிதையாக்கித்‌ தருபவர்களுக்கு ஆயிரம்‌ பொற்காசு என்று அறிவித்தான்‌. பாடல்வரிகளைப் பார்ப்போம்.

  1. வெவ்விய வேலான் வீசும் வாச மோந்து ஈது வேறு
    திவ்விய வாசம் ஆக இருந்தது தென்றல் காவில்
    வெளவிய வாசம் அன்று காலுக்கும் வாசம் இல்லை
    எவ்வியல் வாச மேயோ இது என எண்ணம் கொள்வான்.
  2. திரும்பித்தன் தேவி தன்னை நோக்கினான் தேவி ஐம்பால்
    இரும்பித்தை வாசம் ஆகி இருந்தது கண்டில் வாசம்
    சுரும்பிற்கும் தெரியாது என்னாச் சூழ்ந்து இறும் பூது கொண்டீ
    தரும்பிதைக் இயல்போ செய்கையோ என ஐயம் கொண்டாள்.
  3. ஐயுறு கருத்தை யாவராயினும் அறிந்து பாடல்
    செய்யுநர் அவர்க்கே இன்ன ஆயிரம் செம்பொன் என்றக்
    கையுறை வேலான் ஈந்த பொன் கிழி கைக் கொண்டு ஏகி
    மெய் உணர் புலவர் முன்னாத் தூக்கினார் வினைசெய் மாக்கள்.

புலவர்கள்‌ அரசனின்‌ மனதை அறிய வாய்ப்‌பில்லை. அவன்‌ சண்பகச்‌ சோலை சென்றதும்‌, பாண்டிமாதேவியின்‌ நலம்‌ பாராட்டியதும்‌, கூந்தலை முகர்ந்ததும் அவர்களுக்குத்‌ தெரிய வாய்ப்பில்லை. அதனால்‌ அவர்கள்‌ கவி யாதும்‌ புனைய வில்லை; விடுகதை.என்று அதை விட்டுவிட்டனர்‌.

  1. அந்த வேலையில் ஆதி சைவரில்
    வந்த மாணவன் மணம் செய் வேட்கையான்
    முந்தை ஆச்சிம முயலும் பெற்றியான்
    தந்தை தாய் இலான் தருமி என்று உளான்.
  2. ஒருவன் நான் முகத்து ஒருவன் மார்பு உறை
    திருவன் நாடரும் தேவனாலும் உரு
    அருவ நாலகன் தானைத் தன் கலி
    வெருவ நாடி முன் வீழ்ந்து வேண்டுவான்.
  3. தந்தை தாய் இலேன் தனியன் ஆகிய
    மைந்தனேன் புது வதுவை வேட்கையேன்
    சிந்தை நோய் செயும் செல்ல தீர்ப்பதற்கு
    எந்தையே இது பதம் என்று ஏத்தியே.
  4. நெடிய வேத நூல் நிறைய ஆகமம்
    முடிய ஓதிய முறையினில் நிற்கு எனும்
    வடி இல் இல்லற வாழ்க்கை இன்றி நின்
    அடி அருச் சனைக்கு அருகன் ஆவனோ.
  5. ஐய யாவையும் அறிதியே கொலாம்
    வையை நாடவன் மனக் கருத்து உணர்ந்து
    உய்ய ஓர் கவி உரைத்து எனக்கு அருள்
    செய்ய வேண்டும் என்று இரந்து செப்பினான்.
  6. தென்னவன் குல தெய்வம் ஆகிய
    மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன் தமிழ்
    சொல் நலம் பெறச் சொல்லி நல்கினார்
    இன்னல் தீர்ந்து அவன் இறைஞ்சி வாங்கினான்.
  7. பொன் தனிச்சடைப் புவன நாயகன்
    சொற்ற பாடல் கைக் கொண்டு தொல் நிதி
    பெற்று எடுத்தவன் போன்று பீடு உறக்
    கற்ற நாவலர் கழகம் நண்ணினான்.

அந்த நிலையில்‌ தருமி என்ற குடுமி வைத்த பார்ப்பன இளைஞன்‌ இதனைக்‌ கேள்விப்பட்டான்‌. வயது ஆகியும்‌ வாலிபப்‌ பருவத்தில்‌ மண வைபவத்தை அவன்‌ கண்டது இல்லை. வறுமை அவனைச்‌ சிறுமைப்படுத்தியது. மணம்‌ செய்து கொள்ள ஆசை இருந்தது. பணம்‌ இல்லை
என்பதால்‌ ஏங்கிக்‌ இடந்தான்‌. கோயில்‌ தெய்வத்திடம்‌ முறையிட்டால்‌ ஓசியில்‌ கவிதையாவது திடைக்காதா என்ற நினைவு ஓடியது இறைவனிடம்‌ பொன்னும்‌ பொருளும்‌ தேரிடையாகக்‌
கேட்கவில்லை; கவிதை ஒன்று தந்தால்‌ அதைத்‌ தான்‌ காசாக்கிக்‌ கொள்ள முடியும்‌ என்று இறைவனிடம்‌ முறையிட்டான்‌.
கவிதை ஏடு ஒன்று அவன்‌ முன்‌ வந்து விழுந்தது.

“கொங்குதேர்‌ வாழ்க்கை அஞ்சிறைத்‌ தும்பி காமம்‌ செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின்‌ மயிலியற்‌ செறியெயிற்று அரிவை கூந்தலின்‌ நறியவும்‌ உளவோ நீ அறியும்‌ பூவே””
என்று எழுதி இருந்தது.படித்துப்‌ பார்த்தான்‌;
“தேனைத்‌ தேடிச்‌ சுற்றி வரும் வண்டே
விருப்பு வெறுப்பு என்று ஒரு பக்கம்‌ பேசாமல்‌ உண்மையைச்‌ சொல்‌, பூக்களை நாடி அவற்றின்‌ தரம்‌ அறிந்து, தேன்‌ உண்டு மயங்கி வருவது உன்‌ பிழைப்பு. மலர்களின்‌ மணம்‌ அதைப்‌ பற்றிய குணம்‌ அனைத்தும்‌ நீ அறிந்து பழகி உள்ளாய்‌, மயிலின்‌ சாயலும்‌ முல்லை போன்ற
பற்களும்‌ உடைய என்‌ காதலியின்‌ கரிய நீண்ட கூந்தலையும்‌ நீ அறிவாய்‌; நறிய பூ அதனினும்‌ உண்டோ? இருந்தால்‌ சொல்க நீ”’ என்பது அதன்‌ பொருள்‌, அது
அவனுக்குத்‌ தெரியாது.இதை எடுத்துக்‌ கொண்டு புலவர்‌ அரங்கு ஏறினான்‌.
சங்க மண்டபத்தில்‌ இக்கவிதையைத்‌ தங்கு தடையின்றிக்‌ படித்தான்‌.

  1. அளக்கு இல் கேள்வியார் அரசன் முன்பு போய்
    விளக்கி அக்கவி விளம்பினார் கடன்
    உள்ளக் கருத்து நேர் ஒத்தலால் சிரம்
    துளக்கி மீனவன் மகிழ்ச்சி தூங்கினான்.
  2. உணர்ந்த கேள்வியார் இரரோடு ஒல்லை போய்ப்
    புணர்ந்த ஆயிரம் பொன்னும் இன் தமிழ்
    கொணர்ந்த வேதியன் கொள்க இன்று என
    மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான்.

அங்கு அமர்ந்திருந்த அரசனும்‌ இப்பாட்டைக்‌ கேட்டு உள்ளம்‌ தடித்தான்‌; தன்‌ மனத்தில்‌ அலை மோதிக்‌ கொண்டிருந்த சித்திரத்தை எழுது கோல்‌கொண்டு தீட்டியது போல்‌ இருந்தது. :’யான்‌ நினைத்ததை, சொல்லக்‌ கருதியதை இப்பாவலன்‌ படைத்துக்‌ காட்டினான்‌. இந்த நாவலனுக்குப்‌ பொற்கிழி கொடுத்தனுப்புக” என்று ஆணையிட்டான்‌.

  1. வேந்தன் ஏவலால் விபுதர் தம் ஒடும்
    போந்து மீண்டு அவைப் புறம்பு தூங்கிய
    ஆய்ந்த பொன் கிழி அறுக்கும் நம்பியை
    நேர்ந்து கீரன் நில் என விலக்கினான்.
  2. குற்றம் இக் கவிக்கு என்று கூறலும்
    கற்றிலான் நெடும் காலம் வெம் பசி
    உற்றவன் கலத்து உண்ணும் எல்லை கைப்
    பற்ற வாடினான் பண்பு பற்றினான்.

பாட்டில்‌ ஏதாவது குறையிருக்கிறதா என்று
யாப்பறிந்த புலவர்கள்‌ கோப்பு அறிந்து பார்த்தார்கள்‌.எதுகை மோனை அடிதொடை யாப்பில்‌ எந்தக்‌ குறையும்‌ இல்லை.
புலவர்‌ நக்கீரனால்‌ இதைப்‌ பொறுத்துக்‌ கொள்ள இயலவில்லை, பிராமணனைப்‌ பார்த்து ‘நில்‌’ என்றான்‌;அந்தச்‌ சொல்‌ அவனை அச்சுறுத்தியது. இதில்‌ பொருட்‌ குற்றம்‌ உள்ளது” என்றான்‌. இடிகேட்ட
நாகம்‌ போல மனம்‌ நொடிந்து போனான்‌. கோவிலுக்கு ஓடி சோம சுந்தரனை வேண்டினான்‌.

  1. செய்யுள் கொண்டு போய்த் திருமுன் வைத்து உளப்
    பையுள் கொண்ட அப் பனவன் என்னை நீ
    மையுள் கண்ட இவ் வழுவுப் பாடலைக்
    கையுள் நல்கினாய் கதி இலேற்கு எனா

பெருமானே! என் கையில் ஏதோ ஒரு ஓலை கிடைத்ததும், உன்னையே மறந்து பொருளாசையில் அரசவைக்கு ஓடினேனே! அதற்கு தகுந்த தண்டனை கிடைத்துவிட்டது. இனி, என் ஆசை எப்படி நிறைவேறும்! நான், அனாதையாக வாழ வேண்டுமென்பது தான் என் விதி போலும்! எனக்கு இப்படி ஒரு பிழையான பாட்டை ஏன் கிடைக்கச் செய்தாய்? என்று புலம்பினான்.

  1. எந்தை இவ் விகழ்ச்சி நின்னது அல்லதை எனக்கு யாது
    என்னாச்
    சிந்தை நோய் உழந்து சைவச் சிறுவன் இன்று இரங்க
    யார்க்கும்
    பந்தமும் வீடும் வேதப் பனுவலும் பயனும் ஆன
    சுந்தர விடங்கன் ஆங்கு ஓர் புலவனாய்த் தோற்றம்
    செய்தான்.

தன் பக்தனின் குரல் கேட்டும், தன் பாடலிலேயே குற்றம் கண்டுபிடித்த நக்கீரருடன் வாதம் செய்யவும் எண்ணிய சுந்தரேஸ்வரர், மீண்டும் புலவர் வடிவில் தருமி முன் தோன்றினார். தருமி நடந்த விஷயங்களை அவரிடம் சொல்ல, ஏதுமறியாதவர் போல் கேட்ட அந்தப் புலவர் கோபத்துடன், தமிழ்ச்சங்கத்துக்கு விரைந்தார். தங்கள் முன்னால் ஒரு புலவர் செந்நிற முகத்துடன், ஜோதிவடிவமாய் நிற்பதைக் கண்டு செண்பகப்பாண்டியன் வியந்தான். அவரது தோற்றம் அவனைத் தடுமாறச் செய்தது. புலவர் சிங்கம் கர்ஜிப்பது போல் பேசினார். எனது பாட்டில் பிழையிருப்பதாகச் சொன்னீர்களாமே! எனக்கென்ன இலக்கணம் தெரியாதா? என்று கேட்டார். அப்போது நக்கீரர், புலவரே!  உமது பாட்டின் சொற்களில் குற்றமில்லை, பொருளில் மட்டுமே குற்றமிருப்பதாகச் சொன்னேன், என்றார்.

  1. சொல் குற்றம் இன்று வேறு பொருள் குற்றம் என்றான்
    தூய
    பொன் குற்ற வேணி அண்ணல் பொருள் குற்றம் என்னை
    என்றான்
    தன் குற்றம் வருவது ஓரான் புனைமல்ர்ச் சார்பால் அன்றி
    அல் குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்.
  2. பங்கய முக மென் கொங்கைப் பதுமினி குழலோ என்ன
    அங்கு அதும் அனைத்தே என்றான் ஆலவாய் உடையான்
    தெய்வ
    மங்கையர் குழலோ என்ன அன்னதும் மந்தாரத்தின்
    கொங்கலர் அளைந்து நாரும் கொள்கையால் செய்கைத்து
    என்றான்.
  3. பரவி நீ வழிபட்டு ஏத்தும் பரம் சுடர் திருக்காளத்தி
    அரவு நீர்ச் சடையார் பாகத்து அமர்ந்த ஞானப்
    பூங்கோதை
    இரவி நீர்ங் குழலும் அற்றோ என அஃதும் அற்றே
    என்னா
    வெருவிலான் சலமே உற்றச் சாதித்தான் விளைவு
    நோக்கான்.

நக்கீரன் இயற்கையாக பெண்களின் கூந்தலுக்கு மனமில்லை என்று மறுத்தே கூறிவந்தார். சுந்தரேஸ்வரர் அவரிடம், கற்புக்கரசிகள், தேவலோகப் பெண்கள் ஆகியோருக்கு கூட கூந்தலில் இயற்கை மணம் இல்லையோ எனக் கேட்டார். நக்கீரர் அவரிடம், நிச்சயமாக இல்லை, என மறுத்தார். சரி.. நீர் தினமும் வணங்கும் காளஹஸ்தீஸ்வரரின் துணைவியான ஞானப்பூங்கோதை அம்மைக்கும் அப்படித்தானோ, என்றார். ஆம்…என் அன்னை உமையவளுக்கும் கூட அப்படித் தான், என்று அடித்துச் சொன்னார் நக்கீரர். அப்போது சுந்தரேஸ்வரர் ஆக்ரோஷமானார்.

  1. கற்றை வார் சடையான் நெற்றிக் கண்ணினைச் சிறிதே
    காட்டப்
    பற்றுவான் இன்னும் அஞ்சான் உம் பரார் பதி போல்
    ஆகம்
    முற்று நீர் கண் ஆனாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்
    குற்றமே என்றான் தன் பால் ஆகிய குற்றம் தேரான்.
  2. தேய்ந்த நாள் மதிக் கண்ணியான் நுதல் விழிச் செம் தீப்
    பாய்ந்த வெம்மையில் பொறாது பொன் பங்கயத் தடத்துள்
    ஆய்ந்த நாவலன் போய் விழுந்து ஆய்ந்தனன் அவனைக்
    காய்ந்த நாவலன் இம் எனத் திரு உருக் கரந்தான்.

தன் நெற்றிக்கண்ணை அவர் திறக்க நக்கீரர் நடுங்கவில்லை. நீர் இறைவனாகவே இருந்தாலும், உம் பாடலின் பொருள் தவறானது தான், என்று துணிச்சலுடன் வாதிட்டார். அப்போது, சுந்தரேஸ்வரர் தன் கண்களிலிருந்து தீப்பொறிகளை அவர் மீது பாய்ச்ச, நக்கீரர் பொற்றாமரை குளத்தில் போய் விழுந்தார். சுந்தரேஸ்வரர் மறைந்து விட்டார்.

இனி 53-ம் படலமான கீரனைக் கரையேற்றிய படலத்தைப் பார்க்கலாம்.

நக்கீரனை மீண்டும் உயிரிப்பித்து சங்கத்திற்கு அளிக்க அரசனும், அவையினரும் சிவபெருமானிடம் வேண்டினர். அதனால் சிவபெருமான் பொற்றாமைக் குளத்திலிருந்து எழுந்து வர நக்கீரனை அழைத்தார். நக்கீரன் உயிர்பெற்று வந்தார்.

  1. போதையார் உலகம் ஈன்ற புனிதையார் பரஞானப் பூம்
    கோதையார் குழற்குத் தீங்கு கூறிய கொடிய நாவின்
    தீதை யார் பொறுப்பரேயோ அவர் அன்றித்
    திருக்காளத்திக்
    காதையார் குழையினாரைக் காளத்தி கயிலை என்னா.

தனது அகந்தையால் ஞானப்பூங்கோதையார் கூந்தலுக்கு இயற்கையாக மணம் இல்லை என விவாதித்ததற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான் கீரன். திருக்காளத்தியர் மீது நேரிசை வெண்பாவினால் கயிலை பாதி, காளத்தி பாதி எனும் அந்தாதியை பாடினார். இறைவனின் கோபத்தினை பிரசாதமாக கருதி கோபப்பிரசாதம் எனும் பாமாலையைப் பாடினார்.

கீரன் மன்னிப்பு கேட்டதால் கீரனின் வாதம் தவறு என்பது தெளிவாகிறது.

இனி கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலத்தைப் பார்க்கலாம்.

  1. இலக்கணம் இவனுக்கு இன்னும் தௌ¤கில இதனால்
    ஆய்ந்த
    நலத்த சொல் வழூச் சொல் என்பது அறிகிலன் அவை தீர்
    கேள்விப்
    புலத்தவர் யாரைக் கொண்டு போதித்து இவனுக்கு என்னா
    மலைத் தனு வளைத்த முக்கண் மன்னவன் உன்னும்

இறைவன் கீரனுக்கு போதிய இலக்கண அறிவு இல்லை என கூறி அகத்திய முனிவரை அழைத்து நக்கீரருக்கு இலக்கணம் கற்பிக்குமாறு ஆணையிட்டார். அகத்திய முனிவரும் முதல் நூலை தொகை, வகை, விரி முறையினாலே காண்டிகை உரையினாலும், விருத்தி உரையினாலும் ஐயம் திரிபறக் கற்பித்தார். நக்கீரரும் தாம் கற்றவற்றை மற்றப் புலவர்களுக்கும் ஓதி இறைவனிடத்தில் நீங்காத அன்பு பூண்டார்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *