முன்னோர்களை தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டிய முக்கிய திதி தான் தை அமாவாசை. இந்த ஆண்டு (2022ல்) தை அமாவாசை தை 18ம் தேதி (ஜனவரி 31) திங்கட்கிழமை வருகிறது. இந்நாளில் தர்ப்பணம் கொடுத்து, அன்னதானம் செய்வதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் 12 அமாவாசை வந்தாலும், ஆடி அமாவாசை, மகாலய அமாவாசை எனும் புரட்டாசி மாத அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் மிகவும் விசேஷமானவை ஆகும்.
ஒருவர் தன் பெற்றோர் , முன்னோர்கள் மற்றும் குல தெய்வத்தையும் வணங்காவிட்டால், அவர்கள் மற்ற தெய்வங்களை வணங்கி பயனில்லை.
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த முன்னோர்களை தர்ப்பணம் கொடுத்து வழிபட வேண்டிய முக்கிய திதி தான் அமாவாசை.
உங்களால் முடிந்த வரை அன்னதானம் செய்தல், மற்றும் எறும்பு, பசு, காகம் மேலும் ஏழைகளுக்கு உணவளித்தல் ஆகிய செயல்களால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
2022ல் தை அமாவாசை தை மாதம் 18ம் தேதி (ஜனவரி 31) திங்கட்கிழமை வருகிறது.
ஜனவரி 31ம் தேதி பிறபகல் 1.59 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி பிப்ரவரி 1ம் தேதி 12.02 வரை உள்ளது. அதனால் ஜனவரி 31ம் தேதி முழுவதும் முன்னோர்களுக்குத் திதி, தர்ப்பணம் கொடுக்கலாம்.