தெரியுமா உங்களுக்கு? 80ஸ் கிட்ஸ் தொடக்கப் பள்ளிகளில் உறுதிமொழியேற்ற “மாணவர் கடமை-10”
1980 களில் அரசு பள்ளிகளில் காலை அசம்பிளியின் போது தமிழ் தாய் வாழ்த்து, தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியுடன் ‘மாணவர் கடமை பத்து’ கூறப்பட்டு வந்தது. அந்த பத்து கடமைகளைப் பார்க்கலாம்.
1. அறியாமை அகல ஆழ்ந்து படி.
2. ஐயம் நீங்க அளவிலா நூலைத் தேடு.
3. பொறுப்பினைப் பெற பெற்றோரைப் பேணு.
4. அகிலத்தை அடக்க ஆசிரியருக்கு அடங்கு.
5. சீருடை அணிந்து சிறப்புப் பணி செய்.
6. காலம் கணித்து கடமை ஆற்று.
7. தன்னம்பிக்கை பெற தளராது உழை.
8. உடலை வலிவாக்க உடற்பயிற்சி ஓம்பு.
9. உள்ளத்தை பண்படுத்த உணர்ச்சியை அடக்கு.
10. வளர்ச்சியைப் பெற கிளர்ச்சியை விடு.