Spread the love

ஓம் நமசிவாய நமஹ

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை 

நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய் 

வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள் 

கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே 


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்
ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற  வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன்  அம்பலத்தில் ஆடுமே


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

இடது கண்கள் சந்திரன்  வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு 
எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம் 
உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ 


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…


உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல 
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல 
பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல 
அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ 


ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான் 
மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின் 
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே 

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…


அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம் 
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம் 
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம் 
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே 

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் 
தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய 
வெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே 
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே 

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின் 
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின் 
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின் 
ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே 

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…


                                                     திருச்சிற்றம்பலம் 


– சித்தர் சிவவாக்கியார்

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *