அங்க சாஸ்திரம் கூறும் சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணின் பாதம் செந்தாமரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் 5 விரல்களும் பூமியில் பதிய வேண்டும். 5 விரல்களும் ஒன்றோடொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகுபோல் அமைந்திருக்க வேண்டும்.
பாதங்களின் பெருவிரல் நீண்டிருந்தால் நல்லது. காலிலுள்ள நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந்தால் செல்வச் செழிப்புடன் வாழ்வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள். மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம்
சில பெண்களுடைய கால் விரலில் சுண்டு விரல் மட்டும் தரையில் படாமல் மேலே தூக்கியவாறு இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பெண்ணால் குடும்பத்திற்கு ஏற்ற குலவிளக்காக நல்ல குடும்ப வாழ்விற்கு ஒத்து வர இயலாது.
ஒரு காலின் கட்டை விரல் வளைந்தும் மற்றொரு காலில் வளையாமலும் இருந்தால் அந்த பெண்ணுக்கு இரண்டு கணவர் என்று அர்த்தம். அது மறுமணம் மூலமாகவோ அல்லது வேறு முறையிலோ இருக்கலாம்.
இதர அங்கங்களின் சாமுத்ரிகா லட்சணம் அறிய இங்கே சொடுக்கவும்