கர்ப்பம் உறுதியாச்சு, அடுத்து என்ன செய்யணும், எல்லா கணவன் மனைவியும் தெரிஞ்சுக்கணும்!
கர்ப்பத்துக்கு பிறகு பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பெற்றோர் ரீதியான வைட்டமின் எடுத்துகொள்வது கர்ப்பத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கும். இந்த நேரத்தில் உடலுக்கு சில வைட்டமின்களின் கூடுதல் டோஸ் தேவைப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் பிறப்பு குறைபாடுகளிலிருந்து பாதுகாக்க நாளைக்கு 400 முதல் 600 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலம் உட்கொள்ள வேண்டும்.
இந்த ஊட்டச்சத்துக்கள் மிகவும் முக்கியமானவை. பெண்கள் கருத்தரிக்க முயற்சிக்கும் பெற்றோர் வைட்டமின்களை எடுக்க வேண்டும். ஆனால் சுயமாக இல்லாமல் மருத்துவரின் அறிவுரையோடு தினசரி இரண்டு மாத்திரைகள் எடுத்துகொள்ள வேண்டும்.