திருமூலர் அருளிய திருமந்திரம்.
பாயிரம் – கடவுள் வணக்கம்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன்
இந்த பாடலின் பொருள்:-
சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.
மேற்கண்ட கணபதி ஸ்துதியின்படி கணபதி எங்ஙனம் நந்தி மகன் ஆனார் என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார்.
சிவபெருமான் நந்தியாக அவதரித்து கணங்களின் தலைவர் ஆனார் என லிங்க புராணம் குறிப்பிடுகிறது.
ஆகவே சிவனும் நந்தியும் ஒருவரே என்ற கருத்தின் அடிப்படையில் திருமூலர் கணபதியை நந்தி மகன் என குறிப்பிடுகிறார்.