Spread the love

எட்டுத்தொகையுள்எட்டாவதாகிய
புறநானூறு

மூலமும் உரையும்.

கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பிற் றாருங் கொன்றை
ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியு மவ்வே றென்ப
கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை
மறைநவி லந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத்
தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்
பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை
பதினெண் கணனு மேத்தவும் படுமே
எல்லா வுயிர்க்கு மேம மாகிய
நீரற வறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே. 

கடவுள் வாழ்த்து.
பாரதம்பாடிய பெருந்தேவனார் பாடியது.
இதன் பொருள் –
திருமுடிமேற் சூடப்படுங் (பி – ம்.. சூட்டிய) கண்ணி கார்காலத்து மலரும் நறிய கொன்றைப்பூ; அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக் கொன்றைப்பூ; ஏறப்படுவது தூய வெளிய ஆனேறு; மிக்க பெருமை பொருந்திய கொடியும் அவ்வானேறென்று சொல்லுவர்; நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தலும் செய்தது; அக்கறுப்பு, தான் மறுவாயும் வானோரை உய்யக்கொண்டமையின், வேதத்தைப் பயிலும் அந்தணராற் புகழவும்படும்; பெண் வடிவு ஒருபக்கமாயிற்று; ஆய அவ்வடிவுதான், தன்னுள்ளே

புறநானூறு மூலமும் உரையும் முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *